ஏபி டிவில்லியர்ஸ் ஒரு நிபந்தனையுடன் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப தயார்

AB Devillers
AB Devillers

ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கடந்த வருடத்தில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்தார். நடு இரவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த தென்னாப்பிரிக்க அணிக்கு மிகுந்த உதவியை செய்தார். இந்த இரு அணிகளுக்கு எதிராக 7 டெஸ்ட் போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த 7 டெஸ்டில் 6 அரைசதம் மற்றும் ஒரு சதம் ஆகியன விளாசி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ்.

அத்துடன் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2019 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் பங்கேற்று 6 அரைசதங்களுடன் 484 ரன்களை விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டாப் ரன் ஸ்கோரராக திகழ்கிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்பதை உலகிற்கு ஒவ்வொரு முறையும் நிறுபித்து வருகிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் ஏபி டிவில்லியர்ஸ் ஒரு சிறப்பான பேட்ஸ்மேனாக வலம் வந்தார். எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, எத்தகைய மைதானமாக இருந்தாலும் சரி அதனை சரியாக கையாலும் திறன் உடையவர் ஏபிடி, கிரிக்கெட்டில் இவர் சொதப்புவது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். தடுத்து நிறுத்தி விளையாட வேண்டிய இடங்களில் பொறுமையாகவும், அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் அதிரடியாகவும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துபவார். அன்- ஆர்தோ பாக்ஸ் ஷாட் இவரது தனித்திறமையான பேட்டிங் ஷாட்டாகும். அத்துடன் ஏபி டிவில்லியர்ஸின் பயமறியா பேட்டிங் திறன் அவரது கூடுதல் பலமாகும்.

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 20,014 ரன்களை குவித்துள்ளார் ( டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 9577 ரன்கள், டி20 போட்டிகளில் 1672 ரன்கள்). வலது கை பேட்ஸ்மேன் ஏபிடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் போது 50 பேட்டிங் சராசரியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வைத்திருந்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிவேக 150 ஆகிய சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். இந்த அனைத்து சாதனைகளையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் செய்தார். பேட்டிங் லெஜன்ட் ஏபிடி 2015ல் ஜோகன்னஸ்பர்கில் நடந்த போட்டியில் 31 பந்துகளுக்கு சதம் விளாசினார். 2015 உலகக் கோப்பை தொடரில் சிட்னி மைதானத்தில் 66 பந்துகளுக்கு 162 ரன்களை குவித்தார்.

இதற்கிடையில் உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. இந்த நிலையில் அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களும் பெரும் விவாதங்களை எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் சிற்றுண்டி சேம்பியன் நிகழ்ச்சியில் ஏபி டிவில்லியர்ஸ் பங்கேற்ற பேசினார். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கவ்ரவ் கப்பூர் ஏபி டிவில்லியர்ஸிடம், 2023 உலகக் கோப்பையில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவீர்களா மற்றும் அது குறித்து என்ன நோக்கம் உங்கள் மனதில் உள்ளது என கேட்டார். இதற்கு டிவில்லியர்ஸ் பதில் தெரிவித்தவதாவது, கண்டிப்பாக நான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவேன், ஆனால் ஒரு நிபந்தனை, 2023 உலகக் கோப்பையில் எம் எஸ் தோனி விளையாடினால் நானும் விளையாடுவேன்" என சாதூரியமாக பதில் தெரிவித்துள்ளார்.

Quick Links