டி20 (T20) போட்டிகளில் 300 சிக்ஸர்கள் விளாசினார் ஏபி டிவில்லியர்ஸ்

Enter caption
Enter caption

எம்எஸ்எல் (MSL) டி20 தொடரானது தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரை முதன் முறையாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் சங்கம் நடத்தி வருகின்றது . இத்தொடர் 16 நவம்பர் முதல் டிசம்பர் 16 வரை நடைபெருகிறது. இவற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 59 ரன்களை விளாசினார் ஏபி டிவில்லியர்ஸ்.

இத்தொடரின் முதல் போடியானது கேப்டவுன் மற்றும் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த கேப்டவுன் அணி 20 ஓவர்களில் நவாஸ் மற்றும் கைல் அரைசதங்களின் உதவியுடன் 180 ரன்கள் குவித்தது . 181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஏ பி டிவில்லியர்ஸ் அணியான ஸ்பார்டன்ஸ் தொடக்கத்திலேயே 6 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது . பின்பு களமிறங்கிய டிவில்லியர்ஸ் அதிரடியாக ரன்களை குவித்தார். ஏபி டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 59 ரன்களை விளாசிய பின்பும் மறு முனையில் இருந்த வீரர்கள் சொற்ப்ப ரன்களில் வெளியேறியதால் ஸ்பார்டன்ஸ் அணி 49 ரன்களில் தோல்வி அடைந்தது .

டிவில்லியர்ஸ் நீண்ட நாட்களுக்கு பின்பு டி20 போட்டிகளுக்கு திரும்புவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே காணப்பட்டது, கடைசியாக ஆர்சிபி (RCB) அணிக்காக விளையாடிய இவர் கடைசி 3 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் விளாசினார். நேற்றைய போட்டியின் அரைசதம் மூலம் டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 அரைசதம் அடித்த இரண்டாவது தென் ஆப்ரிக்கா வீரர் ஆனார் டிவில்லியர்ஸ். 2014ல் ரஸ்ஸி வான் டெர் டஸன் முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா சார்பில் இச்சாதணை படைத்தார்.

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் தனது 300ஆவது சிக்ஸர்யை பதிவு செய்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் தென் ஆப்ரிக்கா வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இருப்பினும் உலக அளவில் 10 ஆவது வீரர் ஆவர். கிறிஸ் கெயில் 890 சிக்ஸர்களுடனும் கிரான் பொலார்டு 551 சிக்ஸர்களுடனும் பிரண்டன் மெக்கல்லம் 473 சிக்ஸர்களுடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இந்தியா அளவீல் ரோகித் ஷர்மா 320 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் 300 சிக்ஸ்ர்கள் அடித்த ஒரே இந்தியருமாக ரோகித் ஷர்மா உள்ளார்.

உலகளவில் க்றிஸ் கெயில், பொலார்டு, மெக்கல்லம், ட்வேய்ன் ஸ்மித், வாட்சன், வார்னர், ரோகித் ஷர்மா, பின்ச், ரஸ்செல், டிவில்லியர்ஸ் போன்ற 10 வீரர்கள் டி20 போட்டிகளில் 300 சிக்சர்களுக்கு மேல் விளாசியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 4 மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களும் 3 ஆஸ்திரேலியா அணி வீரர்களும் இவற்றில் இடம் பெற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் நடைபெறும் பல டி20 (T20) தொடர்களில் பங்கேற்க்கவிருக்கும் டிவில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வதன் மூலம் அடுத்த 3-4 வருடங்களில் டி20 போட்டிகளில் பல சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

எம்எஸ்எல் (MSL) தொடரில் டிவில்லியர்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியை வரும் 18ஆம் தேதி எதிர்கொள்கிறது.

App download animated image Get the free App now