யாராலும் முறியடிக்க முடியாத ஏ பி டி வில்லியர்ஸ்–ன் சாதனை!!

Ab devilliers
Ab devilliers

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க நாட்டின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் ஏபிடி வில்லியர்ஸ். அதிரடிக்கு பெயர் போன ஏபி டி வில்லியர்ஸ் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது சற்று வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் படைத்த சாதனை ஒன்று இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த சாதனையை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

நம் இந்திய நாட்டில் கூட அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் என்றால் அது ஏபிடி வில்லியர்ஸ் தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின், சேவாக், தோனி போன்ற வீரர்களுக்கு நிகராக ஏபிடி வில்லியர்ஸ்க்கும் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர் கூட்டத்தின் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்று விட்டார்.

தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் பொழுது மைதானத்திற்கு வரும் ரசிகர் கூட்டத்தில் பாதி கூட்டம் ஏபிடி வில்லியர்ஸ்ன் அதிரடியை காணத்தான் ஆவலுடன் வருவார்கள். அந்த அளவிற்கு தனது அதிரடியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமின்றி தனது இயல்பு வாழ்க்கையிலும் சிறந்த மனிதனாக திகழ்ந்து வருகிறார். அதுவும் குறிப்பாக அவரது படிப்பு விஷயத்தில் பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abd Villiars
Abd Villiars

தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற ஜாம்பவான்களின் சாதனைகளை, இந்த தலைமுறையில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் அந்த சாதனைகளை முறியடித்து கொண்டே வருகின்றனர். அதுவும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுவது சச்சின் டெண்டுல்கர் 100 சதம் அடித்தது தான். தற்போது அந்த சாதனையை கூட விராட் கோலி முறியடிக்கும் அளவிற்கு நெருங்கி கொண்டு இருக்கிறார். இவ்வாறு ஒரு வீரரின் சாதனையை, மற்ற கிரிக்கெட் வீரர்கள் முறியடித்து கொண்டிருக்கும் காலத்தில், ஏபிடி வில்லியர்ஸ்ன் சாதனை முறியடிக்க படாமலே உள்ளது.

அந்த சாதனை என்னவென்றால், இவர் இதுவரை 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவர் மொத்தம் 25 சதங்களை விளாசியுள்ளார். அந்த 25 சதங்களிலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு மேல் உள்ளது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இவர் அடித்த அனைத்து சத்தங்களும் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த சாதனையை இதுவரை எந்த பேட்ஸ்மேனும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Abd Villiars
Abd Villiars

இவர் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக அடித்த சதம் வெறும் 61 பந்துகளில் அடித்துள்ளார். இவர் ஓய்வு பெறுவதற்கு கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 61 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். அந்த போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 195.08 ஆகும். இவர் இதுவரை அடித்த 25 சதங்களில், 6 சதங்கள் இந்தியாவுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த சாதனையை இனிவரும் காலங்களில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் யாராவது முறியடிக்க முயற்சி செய்வார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Fambeat Tamil