இங்கிலாந்தில் தற்பொழுது புகழ் பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி இருந்தது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மூத்த வீரர் ஜிம்மி ஆன்டேர்சன் காயம் காரணமாக விலகிய நிலையில் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பிடித்தார். அதே போல் ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் அணிக்கு திரும்பினார் ஹாஷல்வுட். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜெசன் ராய் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜெசன் ராய் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஜோ ரூட்டும் 14 ரன்னில் ஹாஷல்வுட் பந்தில் அவுட் ஆகி வெளியேற அதன் பின்னர் களம் இறங்கிய டென்லி சிறிது நேரம் தாக்குபிடித்து 30 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க நிலைத்து விளையாடிய பர்ன்ஸ் 53 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய பேர்ஸ்ரோ மற்றும் வோக்ஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸின் முடிவில் இங்கிலாந்து அணி 258-10 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் லயன், ஹாஷல்வுட், கம்மின்ஸ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.
அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பென்க்ராப்ட் இருவரும் களம் இறங்கினர். இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே வார்னர் மற்றும் பென்க்ராப்ட் இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக அதன் பின்னர் ஜோடி சேர்ந்த காவாஜா மற்றும் ஸ்டிவன் ஸ்மித் இருவரும் நிலைத்து விளையாடினர். காவாஜா 36 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து விளையாட தவறினர். ஸ்டிவன் ஸ்மித் மட்டும் ஒரு முனையில் நிலைத்து விளையாடி 92 ரன்னில் அவுட் ஆகி வெளியேற ஆஸ்திரேலியா அணியின் மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 8 ரன்கள் பின்தங்கி 250-10 ரன்களை சேர்த்தது.
இங்கிலாந்து அணியில் ஸ்வார்ட் ப்ராட் 4, வோக்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெசன் ராய் 2 ரன்னிலும் கேப்டன் ஜோ ரூட் டக்அவுட் ஆக இங்கிலாந்து அணியின் தொடக்கமே தடுமாறிய நிலையில் அதன் பின்னர் பர்ன்ஸ் மற்றும் டென்லி இருவரும் நிலைத்து விளையாட நிலைமை சரியானது.
அதன் பின்னர் பர்ன்ஸ் 29 ரன்னிலும் டென்லி 26 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டோக்ஸ் நிலைத்து விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டி முதல் நாள் மழையால் தடைபெற்ற நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் விளாசினார்.
இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து இங்கிலாந்து அணி. அதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஐந்தாவது நாளின் பிற்பாதியில் தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பென்க்ராப்ட் இருவரும் வழக்கம் போல் தொடக்கத்திலேயே அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய காவாஜாவும் 2 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் ஸ்மிதிற்கு மாற்று வீரராக களம் இறங்கிய லபுசனே நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் அடித்தார்.
அவரும் அவுட் ஆக ஹேட் 42 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்கள் இழந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் நேரம் முடிக்கு வந்ததை தொடர்ந்து ஆட்டம் டிரா ஆனது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்ய்ப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார் ஆர்ச்சர்.