ஆப்கானிஸ்தான் அணி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது : குல்புதின் நைப்

குல்புதின் நைப்
குல்புதின் நைப்

உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி தலைவர் குல்புதின் நைப் கூறுகையில், இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்த வேதனையையும் மீறி நாளுக்கு நாள் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். ஒரு அனுபவமற்ற அணி உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும் கூறினார். உலக கோப்பையில் இதுவரை ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய ஆறு போட்டியிலும் தோல்வியை தழுவியதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது உலக கோப்பையில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சிறிய அணி இந்தியா போன்ற ஒரு பெரிய அணியை செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல இருந்தபோதிலும் நாங்கள் சரியான போட்டியை அவர்களுக்கு கொடுத்தோம். எங்களது பந்து வீச்சின் மூலம் விராட் கோலி, ரோகித் சர்மா, எம்எஸ் தோனி ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியை 224 ரன்களுக்குள் பேட்டிங்கில் கட்டுப்படுத்தினோம். இருந்தபோதிலும் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் உதவியுடன் எங்களை அவர்கள் வீழ்த்தி விட்டனர். கடைசி ஓவர் வரை எங்களுக்கு நம்பிக்கை இருந்தது, முகமது சமியின் ஹாட்ரிக் மூலம் எங்கள் வெற்றியை அவர் பறித்து விட்டார்.

உலக கோப்பை தொடரின் முதல் நான்கு போட்டிகளில் நாங்கள் மோசமாக தோற்றாலும், வலுவான அணிகளான இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாகவே விளையாடினோம். ஆகவே நாங்கள் இப்போது நாளுக்கு நாள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நினைக்கிறேன். இது தான் உண்மையில் நான் விரும்பிய அணியின் செயல்பாடு.

பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு எதிராக எப்படி கட்டுக் கோப்புடன் பந்து வீசினார்களோ வரும் போட்டிகளிலும் அதேபோல் பந்து வீசினால் எதிரணியின் வியூகத்தை சிதரடிக்கலாம். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டால் நன்றாக இருக்கும். கடந்த போட்டிகளில் நடந்த தவறுகளை சரி செய்து பின் வரும் போட்டிகளில் அதை கடைபிடிப்போம். இதுபோன்ற போட்டிகள் எங்களுக்கு புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை போல் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தீர்க்கமான இன்னிங்ஸ் விளையாடவில்லை. 220, 250 போன்ற இலக்குகளை துரத்தும்போது நடுத்தர வரிசை வீரர்கள் 50 அல்லது 80 ரன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் .30, 20 ரன்கள் போதாது என்று கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் தான் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் குல்புதின் நைப். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் அணியில் சிலருக்கு வருத்தம். இதை அந்த அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரஷித் கான் வெளிப்படையாகவே கூறினார். உலகக் கோப்பை தொடரின் நடுவில் விக்கெட் கீப்பர் அஹமது ஷெஸாதை நீக்கிய சர்ச்சை, இந்த தொடருடன் அணியின் பயிற்ச்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் விளகுகிறார் என பல குழப்பங்களுடன் ஆப்கன் அணி விளையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணி 2015 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்திற்கு எதிராக ஒரு வெற்றியைப் பெற்ற பின்னர் உலகக் கோப்பைகளில் அவர்கள் வெற்றியை ருசித்ததில்லை. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்றில் இரண்டாவது முறை இடம் பிடிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now