புதிய யுக்தியை கையாளும் ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம்- அதிருப்தியில் வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்றபோது.
ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்றபோது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தை தொட்ட அணி. சொந்த நாட்டில் பல தீவிரவாத தாக்குதல்களை தாங்கி கடின உழைப்போடு அந்த அணியின் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியை பார் போற்றும்படி செய்துள்ளனர். அதற்காகவே அந்த நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு தருகின்றனர். அதை அவ்வபோது நம்மால் காண முடிகின்றது. மேலும் அந்த நாட்டின் ஜனாதிபதி கூட ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் ஓவ்வொரு போட்டியையும் கண்டு களித்து பிறகு அவர்களை பாராட்ட தவறமாட்டார். அதில் அவருக்கு மிகவும் பிடித்தமானவர் மாயாஜால சூழல் வீரர் "ரஷீத் கான்".

இப்படி கிரிக்கெட்டிற்கு ஒட்டுமொத்த நாடும் பின்னின்று உற்சாக மூட்டும் இவ்வேளையில் அனைத்து வீரர்களும் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர். ஆம், ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஆச்சர்யம் என்னவென்றால் 10 அணிகள் மட்டுமே பங்குபெறமுடியும் என்ற நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தகுதி சுற்றில் அபாரமாக விளையாடி முதல் அணியாக தகுதி பெற்றது. இதில் மற்றொரு அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.

அந்த வேளையில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது ஆப்கானிஸ்தான் அணி, ஏனென்றால் மூன்று முறை உலகக்கோப்பை வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் வென்று ஆதிக்கத்தை செலுத்தியது.

அது மட்டுமின்றி உலக அரங்கில் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை கண்டு டெஸ்ட் அந்தஸ்தும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமானது அந்த அணி கடைசியாக பங்குபெற்ற அனைத்து தொடர்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது, பின்பு ஆசிய கோப்பை தொடரில் அனைத்து அணிக்கும் குடைச்சல் கொடுத்து இந்திய அணிக்கு எதிரான போட்டியை சமனில் முடித்தது, மேலும் தற்போது நடந்து முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அணைத்து போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது.

இவ்வாறு ஆப்கானிஸ்தான் அணிக்கு எல்லாம் சரியாக அமைய முக்கிய காரணமாக விளங்குவது அந்த அணியின் தலை சிறந்த வீரர்கள் தான். அதில் குறிப்பிடபடும் வீரர்கள் அந்த அணியின் கேப்டன் ஆப்கான், ஆல்ரவுண்டர் நபி, சூழல் வீரர் ரஷீத் கான். இவர்கள் மூவரும் அந்த அணிக்கு தூண்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களை தவிர்த்து, மொகமது ஷசாத்(WK&BATSMAN), ரஹமத் ஷா, முஜீப் ஊர் ரஹ்மான், குல்புதின் நைப், ஷென்வாரி போன்ற வீரர்களை கூறலாம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனது அணிக்காக போராடியுள்ளனர்.

இதுபோன்ற ஒரு சூழலில் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ஆப்கானிஸ்தான் அணி பங்குபெரும் மூன்று விதமான போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்கள் என்பது தான்.

அஸ்கார் ஆப்கான் மற்றும் குல்புதின் நைப்
அஸ்கார் ஆப்கான் மற்றும் குல்புதின் நைப்

அதாவது; T-20 அணிக்கு- ரஷீத் கான், ஒருநாள் போட்டிக்கு - குல்புதின் நைப், டெஸ்ட் போட்டிக்கு - ரஹ்மத் ஷா.

இப்படி உலக கோப்பை தொடங்கவிருக்கும் இவ்வேளையில் இந்த மாற்றம் சரியானது தானா என்பது அந்த வீரர்களிடையே பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தாண்டியும் அதிர்ச்சி தருவது ஆப்கானை அனைத்து கேப்டன் பதவியிலிருந்தும் தூக்கியது தான். இதை அந்நாட்டு வீரர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காரணம், ஆப்கானிஸ்தான் அணிக்கு படிக்கட்டாக இருந்து வந்துள்ளவர் ஆப்கான், அவர் இந்திய அணியின் "கூல் கேப்டன்" என வர்ணிக்கப்படும் "தோனிக்கு" நிகரானவராக பார்க்கப்படுகிறார். இவர் மிடில் வரிசையில் களமிறங்கி கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்வார்.

இவரது கேப்டன்ஷிப் சாதனைகள்:

ஒருநாள் போட்டி :

போட்டிகள்: 56, வெற்றி: 31, தோல்வி: 21, டை: 1; வெற்றி சராசரி: 59.43.

டி-20 போட்டி:

போட்டிகள்: 46, வெற்றி: 37, தோல்வி: 9, டை: 0; வெற்றி சராசரி: 80.43.

டெஸ்ட் போட்டி:

போட்டிகள்: 2, வெற்றி: 1, தோல்வி: 1, ட்ரா: 0, வெற்றி சராசரி: 50.

இப்படி ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்த ஆப்கானை வெளியேற்றியது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதுபற்றி அந்த அணி வீரர்களும் பதிவிட்டுள்ளனர் அது வருமாறு:

இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து மற்றும் ஐயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இது உலக கோப்பைக்கு தயாராக பயிற்சிகளமாக அமையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கேப்டன்சி மாற்றம் அந்த அணிக்கு எவ்வாறு கைகொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Quick Links

App download animated image Get the free App now