ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே மூன்று டி-20 போட்டிகளும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதில் முதலில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்பொழுது இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. எற்கனவே முதல் டி-20 போட்டி முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாவது டி-20 போட்டி அதே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா மற்றும் உஸ்மான் கானி இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர். நான்கு பக்கமும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்க விட்ட ஹஸ்ரதுல்லா அதிரடியாக 42 பந்தில் சதம் வீளாசினார். 42 பந்துகளில் சதம் வீளாசியதன் மூலம் குறைந்த பந்துகளில் சதம் வீளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது இருவரும் சிக்ஸர் மழைகளை பொழிய அயர்லாந்து அணி திக்குமுக்கு ஆடியது. இருவரும் இணைந்து 236 ரன்களை குவித்தனர். 73 ரன்னில் உஸ்மான் கானி போய்ட் ரான்கின் பந்தில் அவுட் ஆகினார். இந்த ஜோடி அடித்த 236 ரன்கள் தான் டி-20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய அஸ்கர் ஸ்டானிக்ஸாய் வந்த வேகத்தில் 7 ரன்னில் சேஸ் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய நபி 17 ரன்னில் லிட்டில் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஹஸ்ரதுல்லா 162 ரன்களை குவித்தார். இதுவே ஒரு தனிவீரர் டி-20 போட்டியில் அடித்த இரண்டாவது பெரிய ஸ்கோர் ஆகும். ஆப்கானிஸ்தான் அனைத்து சாதனைகளையும் முறியடித்து 278 ரன்களை குவித்தது.
இதை அடுத்து அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் மற்றும் கெயின் ஒ ப்ரையன் இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிலைத்து விளையாடினர். இவர்களும் அதிரடியாக ரன்களை குவித்தனர். இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை அடித்தனர். இதில் கெயின் ஒ ப்ரையன் 37 ரன்னில் மாலிக் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய பால்பிர்னி 2 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து நிலைத்து விளையாடிய பால் ஸ்டிர்லிங் 91 ரன்களை குவித்தார். இவர் முஜிப் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கியவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ரஷித் கானின் சுழளில் அயர்லாந்து அணி தடுமாறியது. அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹஸ்ரதுல்லா தேர்வு செய்யப்பட்டார்.