நடந்தது என்ன?
இங்கிலாந்தில் நடைபெற உள்ள கவுண்டி சேம்பியன் ஷீப் டெஸ்ட் தொடரில் ஹாம்ஸைர் அணிக்காக விளையாடப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அஜின்க்யா ரகானே பெற்றுள்ளார். ரகானே எய்டன் மர்க்ரம்-ற்கு பதிலாக அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரகானே 8 கவுண்டி சேம்பியன் ஷீப் போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா...
கடைசியாக வந்த செய்திப்படி அஜின்க்யா ரகானே கவுண்டி கிரிக்கெட் தொடரில் 6 இந்திய டெஸ்ட் வீரர்களுடன் பங்கேற்கப் போவதாக கூறப்பட்டது. இங்கிலாந்து கவுண்டி சேம்பியன் ஷீப்பில் இவருடன் சேர்ந்து பங்கேற்கும் மற்ற ஆறு வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், மயான்க் அகர்வால், பிரித்வி ஷா, ஹனுமா விகாரி, செட்டிஸ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா.
கதைக்கரு
மிகுந்த சவாலான இங்கிலாந்து கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் கவுண்டி சேம்பியன் ஷீப்பில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பது, அவர்களது ஆட்டத்திறனை மேலும் மெருகேற்ற மிகவும் உதவியாக இருக்கும். புஜாரா இந்த பலனை கடந்த முறை யார்க்ஸைர் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று பெற்றார்.
அஜின்க்யா ரகானே கவுண்டி சேம்பியன் ஷீப் கிரிக்கெட்டில் ஹாம்ஸைர் அணிக்காக மே மாதம் முதல் ஜீன் மாதம் வரை விளையாட உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
"ஹாம்ஸைர் அணிக்காக முதல் இந்தியராக உலகப் புகழ் பெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் ஹாம்ஸைர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக உழைப்பேன். கவுண்டி கிரிக்கெட்டில் என்னை விளையாட அனுமதித்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"
ஹாம்ஸைர் அணியின் இயக்குநர் கிளிஸ் வைட், அஜின்க்யா ரகானே தங்களது அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என கூறியுள்ளார்.
அஜின்க்யா ரகானேவின் ஆட்டத்திறன் கவுண்டி கிரிக்கெட்டில் வெளிப்பட இருப்பதை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஹம்ஸைர் அணியின் தற்போதைய தொடக்க ஆட்டக்காரர்கள் எய்டன் மர்க்ரம் மற்றும் திமுத் கருணாரத்னே இருவரும் உலகக் கோப்பையில் தேர்வாகியுள்ளனர். இதனால் நாங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்றி தவித்து வந்தோம். இந்த தகவல் வெளியே தெரியவர அஜீன்யா ரகானே கவுண்டி கிரிக்கெட்டில் ஹாம்ஸைர் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டினார். இது அவருக்கு ஒரு அற்புதமான வாயப்பாக இருக்கும். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான பந்துவீச்சை அருமையாக கையாண்டுள்ளார். ஹாம்ஸைர் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு இவரது ஆட்டத்திறன் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
இந்திய கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் லெஜன்ட் அஜின்க்யா ரகானே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என விரும்பியது. இது உலகக்கோப்பைக்கு பிறகு தொடங்க உள்ள டெஸ்ட் சேம்பியன் ஷீப்பிற்கு தயராகும் விதமாக அஜின்க்யா ரகானேவிற்கு இருக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலக டெஸ்ட் சேம்பியன் ஷீப்பின் முதல் தொடர் ஆஸஸ் தொடர். இந்திய அணி டெஸ்ட் சேம்பியன் ஷீப்பின் முதல் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதற்காகவே இந்திய டெஸ்ட் அணி வீரர்களை கவுண்டியில் விளையாட வைக்கப்போவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.