தனது அறிமுக கவுண்டி போட்டியிலேயே சதம் விளாசி அசத்திய அஜின்க்யா ரகானே

Courtesy: Hampshire Cricket/Twitter
Courtesy: Hampshire Cricket/Twitter

இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜின்க்யா ரகானே ஹாம்ஸைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கு எதிரான தனது முதல் கவுண்டி போட்டியில் களமிறங்கிய ரகானே சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்திற்கு காலடி வைக்கும் சமயத்தில் ரகானே சதம் விளாசியிருப்பது அனைவரின் கவனத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு முன் முரளி விஜய் மற்றும் ப்யுஸ் சாவ்லா ஆகிய இந்திய வீரர்கள் தனது அறிமுக போட்டியில் சதம் விளாசியுள்ளனர். அந்த பட்டியலில் ரகானேவும் தற்போது இனைந்துள்ளார்.

ரகானே தனது முதல் இன்னிங்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். ஹாம்ஷைர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் தடுமாறி வந்த போது அஜின்க்யா ரகானே 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 197 பந்துகளை எதிர்கொண்டு 119 ரன்களை குவித்துள்ளார். நியூபோர்ட் நகரின் ரசிகர்களுக்கு இவரது பேட்டிங் மிகவும் உற்சாகத்தை கொடுத்தது. மிகவும் நிதான ஆட்டத்தை கையாண்டு கொண்டிருந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ரகானே இரட்டை சதம் விளாசும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அஜின்க்யா ரகானே இரண்டாவது நாளில் 0* ஆக இருந்து மூன்றாவது நாளில் ரன் கனக்கை தொடங்கினார். ரகானேவுடன் சேர்ந்து மூன்றாவது நாளில் ஹாம்ஷைர் கேப்டன் ஷாம் நாரத்ஈஸ்ட் பொறுப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். ஹாம்ஷைர் அணி 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் இணைந்து 257 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினர். ரகானே 14 பவுண்டரிகளை விளாசி 60ற்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். 119 ரன்கள் ரகானே எடுத்திருந்தபோது மேதீவ் கார்டர் பௌலிங்கில் தனது விக்கெட்டை இழந்தார்.

தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த காரணத்தால் ஏய்டன் மர்க்ரம் ஹாம்ஷைர் அணியிலிருந்து விலகினார். அதனால் அவருக்கு பதிலாக அஜின்க்யா ரகானே களமிறங்கினார். ஹாம்ஷைர் கவுண்டி அணியில் முதல் இந்தியராக ரகானே பங்கேற்றுள்ளது, அவருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரகானே தனது ஆட்டத்தை மேலும் மேம்படுத்தி டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் இந்திய அணியின் முதல் தொடரான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். எனவே இவரது சிறப்பான ஆட்டம் மேன்மேலும் தொடரும் என நம்பப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர் 2019 உலக கோப்பைக்கு தொடருக்கு பிறகு தொடங்க உள்ளது.

ஹாம்ஷைர் அணி மொத்தமாக மூன்றாவது நாளில் 85 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களை குவித்து டிக்ளர் செய்துள்ளது. கேப்டன் நார்த்ஈஸ்ட் 133 ரன்களை அதிகபட்சமாக குவித்துள்ளார். 439 என்ற இலக்குடன் களமிறங்கிய நாட்டிங்காம் அணி 15 ஓவர்களிலேயே தனது தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஹாம்ஷைர் அணி 4வது நாளில் நாட்டிங்காம் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி கவுண்டி மண்டல 1ல் மற்றொரு வெற்றியை ருசிக்க திட்டமிடும். ஹாம்ஷைர் அணி புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

App download animated image Get the free App now