2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் அஜீன்க்யா ரகானே இரண்டாவது சீசன் மும்பை டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் நார்த் மும்பை பன்தர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய அஜின்க்யா ரகானே இவ்வருட சீசனிலிருந்து விலகியுள்ளார். 2019 ஐசிசி உலகக் கோப்பைக்கு பிறகு தொடங்க உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக டெஸ்ட் ஸ்பெஸலிஸ்ட் அஜின்க்யா ரகானே கவுண்டி சேம்பியன் ஷீப்பில் ஹாம்ப்ஸைர் அணிக்காக வினளையாட அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய உள்ளார்.
மும்பை டி20 தொடருக்கான ஏலம் மே 4 அன்று நடைபெற உள்ளது. நட்சத்திர வீரர்களான ஷர்துல் தாகூர், ஆதித்யா தாரே, மற்றும் சஃப்ரஸ் கான் ஆகியோருடன் 100 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா பந்தர்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அஜின்க்யா ரகானே அணித் தேர்வில் இடம்பெறவில்லை. நார்த் மும்பை பன்தர்ஸ் அணியை யார் வழிநடத்துவார்கள் என்பதைப் பற்றி எந்த தகவலும் அந்த அணி நிர்வாகம் வெளியிடவில்லை. நார்த் மும்பை பன்தர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உமேஷ் பத்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் மும்பை பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி அணியின் புதியதலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது மும்பை டி20 லீக் மே 14 அன்று தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்து 2 நாட்களுக்கு பிறகு இந்த மும்பை டி20 தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணியின் துனைக் கேப்டன் அஜீன்க்யா ரகானேவை ஹாம்ஸைர் அணி ஏய்டன் மார்க்ரம்-ற்கு பதிலாக அணியில் சேர்த்துள்ளது. இதனை ஏப்ரல் 25 அன்று கவுண்டி கிளப் அணி உறுதி செய்தது. கவுண்டி சேம்பியன் ஷீப்பின் மிடில் சீசனில் இவர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரகானே மே, ஜீன் மற்றும் முதல் வார ஜீலை ஆகிய மாதங்களில் நடைபெறவிருக்கும் 8 போட்டிகளில் பங்கேற்க உள்ளார். மும்பையை சேர்ந்த ரகானேவுக்கு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக இந்த கவுன்டி போட்டிகள் அமையும் என நம்பப்படுகிறது.
அஜின்க்யா ரகானே ஹாம்ஸைர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்-ற்கு பதிலாக களமிறங்க உள்ளார். எய்டன் மார்க்ரம் ராயல் லண்டன் ஓடிஐ போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார். ரகானே முதல் இந்திய வீரராக ஹாம்ஸைர் அணிக்காக விளையாட உள்ளார். இது அவருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுன்டி கிரிக்கெட்டில் பங்கேற்க NOC எனப்படும் தடையில்ல சான்றிதழை அளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அஜின்க்யா ரகானே நன்றி தெரிவித்திருந்தார். அத்துடன் தனது முழு ஆட்டத்திறனையும் ஹாம்ஸைர் அணிக்காக வெளிபடுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.