கடந்த ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மிகவும் பொறுமையாக ஆடினார். இவ்வாறு பொறுமையாக ஆடிய தோனி பேட்டிங்கை விமர்சனம் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜீத் அகர்கர். அவர் கூறியதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
நம் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே t20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியில் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆரம்பித்தது இந்திய அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் கோலி மற்றும் ராயுடு ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினார். இந்த இக்கட்டான நிலையில் ரோகித் சர்மாவும் மற்றும் தோனியும் போட்டியை கையில் எடுத்தனர். இருவரும் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ஆடினார்கள். அதன் பின்பு தோனி 96 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்பு அவுட்டாகி விட்டார் தோனி. அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். அதன் பின்பு அடித்து ஆடி தனது 21 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
அரை சதத்திற்கு அப்புறம் அதிரடியாக ஆடி ரோகித் சர்மா ரன்களை சேர்த்தார். இருப்பினும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் தோனியின் பேட்டிங் தான் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியது என்ன என்றால், தொடக்கத்தில் 25 முதல் 30 பந்துகள் வரை தோனி நிதானமாக ஆடியது நியாயமானதுதான். ஆனால் அவர் கிட்டத்தட்ட நூறு பந்துகளை பிடித்து விட்டார். அவ்வாறு 100 பந்துகளை பிடித்தும் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 50 தான் இருந்தது. இந்த ஸ்டிரைக் ரேட் தான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மேலும், ரோஹித் மட்டுமே கூட அணியை வெற்றி பெற வைத்திருப்பார் ஆனால், அவருக்கு தோனி ஓரளவு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் அடித்து ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி ரன் அடித்ததால் ரோஹித் அதிக சுமையை சுமந்தார். அதனால் தான் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தும் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தோனியின் பேட்டிங்கை குறித்து கூறினார்.