ஐபிஎல் 2019: அனைத்து அணிகளின் பயிற்சியாளர்கள் பட்டியல்

தோனியுடன் ஸ்டீபன் பிளெமிங்
தோனியுடன் ஸ்டீபன் பிளெமிங்

ஒரு அணியின் வெற்றிக்கு வீரர்கள் எவ்வளவு முக்கியமோ பயிற்சியாளர்களும் அவ்வளவு முக்கியம். அணியின் வெற்றிக்கான வியூகத்தை வகுப்பவர் பயிற்சியாளர் தான். அணியின் வெற்றி தோல்வியை சரிவர கவனித்து அணியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர் பயிற்சியாளர் .

பிரீமியர் லீக் ,லா லிகா தொடர்களில் விளையாடும் அணிகள் வெற்றி பெற தலைசிறந்த பயிற்சியாளர்களை நியமிக்கும். அதே போல ஐபிஎல் அணிகளும் உலகில் உள்ள தலை சிறந்த பயிற்சியாளர்களை தங்கள் அணிக்கும் நியமித்துள்ளன.

இந்த தொகுப்பில் 8 ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பற்றி காண்போம்

(குறிப்பு: டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி 8 ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளராக உள்ளவர்கள் பட்டியல் )

#சென்னை சூப்பர் கிங்ஸ்

Stephen Fleming
Stephen Fleming

தலைமை பயிற்சியாளர் : ஸ்டீபன் பிளெமிங் (NZ)

சென்னை அணியின் வெற்றிகளுக்கு மூளையாக செயல்படுபவர் ஸ்டீபன் பிளெமிங் .2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் அங்கம் வகிக்கிறார் பிளெமிங் . அவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி மூன்று ஐபிஎல் தொடர்களை வென்றுள்ளது. இந்த ஆண்டும் அவரே பயிற்சியாளராக தொடரவுள்ளார்

பேட்டிங் பயிற்சியாளர்: மைக் ஹஸ்ஸி (AUS), பந்துவீச்சு பயிற்சியாளர்: லக்ஷ்மிபதி பாலாஜி (IND)

சென்னை அணியின் முன்னாள் வீரர்களான மைக் ஹஸ்ஸி மற்றும் பாலாஜி தற்பொழுது அந்த அணியின் பயிற்சியாளர்களாக உள்ளனர்

பந்துவீச்சு ஆலோசகர்: எரிக் சிமன்ஸ் (SA)

ஃபீல்டிங் பயிற்சியாளர்: ராஜீவ் குமார் (IND)

ஜார்கண்ட் மாநில அணியின் பயிற்சியாளராக உள்ள ராஜீவ் குமார் சென்னை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்

பிசியோதெரபிஸ்ட்: டாமி சிசெக்

அணி மேலாளர்: ரஸல் ராதாகிருஷ்ணன்

#டெல்லி கேப்பிடல்ஸ்

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்

தலைமை பயிற்சியாளர்: ரிக்கி பாண்டிங் (AUS)

2014ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்தார் ரிக்கி பாண்டிங். அவரது பயிற்சியின் கீழ் மும்பை அணி 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றது. சென்ற ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பாண்டிங் அதே பதவியில் தற்பொழுது நிலைக்கிறார்

உதவி பயிற்சியாளர்: முகம்மது கைஃப் (IND)

குஜராத் அணியின் உதவி பயிற்சியாளர் ஆக 2017 ஆம் ஆண்டு இருந்த கைப் தற்பொழுது டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்

டேலண்ட் ஸ்கவுட்: முகம்மது கைஃப் மற்றும் பிரவின் அமர் (IND)

பந்துவீச்சு பயிற்சியாளர்: ஜேம்ஸ் ஹோப்ஸ் (AUS)

டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஹோப்ஸ் மீண்டும் அதே பதவியில் நிலைக்கிறார்

ஃபீல்டிங் பயிற்சியாளர்: சுபாடிப் கோஷ் (IND)

பிசியோதெரபிஸ்டுகள்: பால் கிளோஸ் (NZ), வைபவ் டாகா (IND)

அணி மேலாளர்: சுனில் வால்சன்

#கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Mike-Hesson
Mike-Hesson

தலைமை பயிற்சியாளர்: மைக் ஹெஸ்ஸன் (NZ)

நியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெஸ்ஸன் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

உதவி பயிற்சியாளர்: மிதுன் மன்ஹாஸ் (IND)

பந்துவீச்சு பயிற்சியாளர்: ரியான் ஹாரிஸ் (ஏஸ்)

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான ரியான் ஹாரிஸ் தற்பொழுது பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக உள்ளார்

ஃபீல்டிங் பயிற்சியாளர்: கிரேக் மக்மில்லன் (NZ)

#கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜாக் காலிஸ்
ஜாக் காலிஸ்

தலைமை பயிற்சியாளர்: ஜாக் காலிஸ் (SA)

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஆல் ரௌண்டர்களில் ஒருவரான ஜாக் காலிஸ் , 2016 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ளார்

உதவி பயிற்சியாளர்: சைமன் கேடிச் (AUS)

2015 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ளார் சைமன் கேடிச் .மேலும் அவர் கொல்கத்தாவின் சகோதர அணியான டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்

பந்துவீச்சு பயிற்சியாளர்: ஹீத் ஸ்ட்ரீக் (ZIM)

இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக் , 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக உள்ளார்

பிசியோதெரபிஸ்ட்: ஆண்ட்ரூ லீபஸ் (AUS)

#ராஜஸ்தான் ராயல்ஸ்

பேடி அப்டன்
பேடி அப்டன்

தலைமை பயிற்சியாளர்: பேடி அப்டன் (SA)

ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக 2013 ஆண்டு முதல் 2015ஆண்டு வரை இருந்த பேடி அப்டன் தற்பொழுது மீண்டும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

பேட்டிங் பயிற்சியாளர்: அமோல் முஜம்தார் (IND)

ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர்: சயராஜ் பஹுலுலே (IND)

8 ஐபிஎல் அணிகளில் ஸ்பின் பௌலிங் பயிற்சியாளர் உள்ள ஒரே அணி ராஜஸ்தான் அணி ஆகும்

ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர்: ஸ்டீபன் ஜோன்ஸ் (ENG)

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வேகபந்துவீச்சாளரான ஸ்டீபன் ஜோன்ஸ் ராஜஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் ஆக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்

ஃபீல்டிங் பயிற்சியாளர்: டிஷான்ட் யாக்னிக் (IND)

பிசியோதெரபிஸ்ட்: ஜான் குளோஸ்டர் (AUS)

#ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கேரி கிர்ஸ்டன்
கேரி கிர்ஸ்டன்

தலைமை பயிற்சியாளர்: கேரி கிர்ஸ்டன் (SA)

கடந்த 8 வருடங்களாக டேனியல் வெட்டோரியின் பயிற்சியில் கீழ் விளையாடிய பெங்களூரு அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்னை நியமித்துள்ளது

பந்துவீச்சு பயிற்சியாளர்: ஆஷிஷ் நெஹ்ரா (IND)

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான நெஹ்ரா, 2018 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக உள்ளார்

பிசியோதெரபிஸ்ட்: ஈவன் ஸ்பீச்சிலி (SA)

#சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்

டாம் மூடி
டாம் மூடி

தலைமை பயிற்சியாளர்: டாம் மூடி (AUS)

2013 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார் டாம் மூடி. அவர் பயிற்சியின் கீழ் சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது . நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இல்லாத போதும் அந்த அணி சென்ற வருடம் ஐபிஎல் இறுதி போட்டி வரை முன்னேறியது

உதவி பயிற்சியாளர்: சைமன் ஹெல்மோட்

மெல்போர்ன் ரெனெக்டெஸ் அணியின் பயிற்சியாளராக 2015 ஆம் ஆண்டு வரை இருந்த சைமன் ஹெல்மோட் சென்ற வருடம் முதல் சன்ரைசர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ளார்

பந்துவீச்சு பயிற்சியாளர்: முத்தையா முரளிதரன் (SL)

வழிகாட்டி: வி.வி.எஸ்.லட்சுமண் (IND)

பிசியோதெரபிஸ்ட்: தியோ காப்கோலாக்கிஸ்

#மும்பை இண்டியன்ஸ்

தலைமை பயிற்சியாளர்: மகிலா ஜெயவர்தனே (SL)

மகேலா ஜெயவர்தனே
மகேலா ஜெயவர்தனே

2017 ஆம் ஆண்டு பாண்டிங் விட்டுச்சென்ற பயிற்சியாளர் இடத்தை நிரப்ப நியமிக்கப்பட்டார் மகேலா ஜெயவர்தனே அந்த ஆண்டு மும்பை அணி ஐபிஎல் பட்டம் வென்றது சென்ற ஆண்டு சரியாக விளையாடாத மும்பை அணி இந்த வருடம் ஜெயவர்தனேவின் பயிற்சியின் கீழ் மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உதவிப் பயிற்சியாளர்: பராஸ் மம்ரேபி (IND)

பேட்டிங் பயிற்சியாளர்: ராபின் சிங் (IND)

பந்துவீச்சு பயிற்சியாளர்: ஷேன் பாண்ட் (NZ)

ஃபீல்டிங் பயிற்சியாளர்: ஜேம்ஸ் பம்மெண்ட் (ENG)

நட்சத்திர வீரர் ஜான்ட்டி ரோட்ஸ் இடத்தை நிரப்ப ஜேம்ஸ்சை சென்ற ஆண்டு மும்பை அணி நியமித்தது இந்த வருடமும் அவரே பயிற்சியாளர் ஆக தொடருவார் என தெரிகிறது

பேட்டிங் வழிகாட்டி: சச்சின் டெண்டுல்கர் (IND)

கிரிக்கெட் இயக்குநர்: ஜாகீர் கான் (IND)

அணி மேலாளர்: ராகுல் சங்கவி

எழுத்து : கோபால் மிஸ்ரா

மொழியாக்கம் : தினேஷ் சத்தியா

Quick Links

App download animated image Get the free App now