இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம்.1983-இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் மிகவும் சிலரே ஆல்ரவுண்டர்களாக இருந்தனர்.கபில் தேவ், மொகிந்தர் அமர்நாத், மதன் லால், ரோஜர் பின்னி போன்ற வீரர்களின் இரு துறைகளுக்கான பங்கு ஏராளம்.
ஆனால், கடந்த இருபது வருடங்களாகத் தேர்வாளர்கள் ஆல்ரவுண்டர்களை அணியில் நிரப்ப எதிர்நோக்கினர், குறிப்பாக வேகப்பந்து ஆல்ரவுண்டர்களை. ஹர்திக் பாண்டியா ஒரு நட்சத்திரமாக இந்திய அணியில் குங்ஃபூ பாண்டியாவாக உருவெடுக்கும் முன்னர், தேர்வாளர்கள் சில ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பளித்தனர்.இந்திய கிரிக்கெட் ஒரு உலகத்தர ஆல்ரவுண்டரை உருவாக்கும் விஷயத்தில் தோல்வியுற்றது.
இந்திய கிரிக்கெட் அணி பல ஆல்ரவுண்டர்களை பயன்படுத்தி குறைந்தளவே வெற்றியைக் கண்டது.அப்படி வாய்ப்பைப் பயன்படுத்துவதில் தோல்வியடைந்த ஐந்து வீரர்களைக் காண்போம்.
5.ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny):
இவர் 1983-இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ஆல்ரவுண்டரான ரோஜர் பின்னியின் மகனாவார் மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான மயந்தி லாங்கரே இவரது மனைவி. இவர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 6/4 என்ற இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சு சாதனையை செய்திருந்தாலும், பிற்காலத்தில் தன் திறமையை நிரூபிக்க தவறினார்.ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் இவரது பங்கு ஒரு போற்றத்தக்க வகையில் அமைந்தது.
இவரது பேட்டிங் ஆவரேஜ் 28-ஆகவும், பவுலிங் ஆவரேஜ் 21-ஆகவும் உள்ளது. மேலும், இவர் இந்தியாவிற்காக 14 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்துள்ளார். அணி நிர்வாகம் எதிர்பார்த்தபடி இவர் தன் திறனை நிரூபிக்க தவறினார். பேட்டிங்கிலோ அல்லது பவுலிங்கிலோ தன் பங்களிப்பை சிறிதளவு மட்டுமே கொடுத்தார். இதுபோன்ற குறைகளால், இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தவறினார்.
2.இர்பான் பதான் (Irfan Pathan):
நீண்ட காலத்துக்கு முன்பு, இந்திய அணியில் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதானை அறிந்திராதவர் எவரும் இல்லை.இருப்பினும், அணியில் பதான் சகோதரர்களில் இளையவரான இர்பான் பதானின் திறன் மேன்மையாகவே கருதப்பட்டது. காயங்கள், பார்ம் இன்றி தவித்தல்,மெதுவான பந்துவீச்சு போன்றவைகள் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை சுருக்கியது.
இவரது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில், பாகிஸ்தானுக்கு எதிராக பனானா ஸ்விங்கில் (banana swing) ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது மறக்க முடியாத நிகழ்வாகும்.இவர் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் கூட, WACA- வில் 2007-08 டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற இவர் அடித்த 46 ரன்கள் மிகவும் உதவிகரமாக இருந்தது. காலப்போக்கில், இவர் பவுலிங்கை விட பேட்டிங்கில் ஜொலித்தார். ஆனால், ஏதேனும் ஒரு துறையில் தன்னை நிரூபிக்க தவறினார். இவர் ஷேன் வாட்சனை போன்ற ஒரு ஆல்ரவுண்டராக இல்லாமல், பின்வரிசை பேட்ஸ்மேனான டிம் பிரஸ்னன் மற்றும் டேவிட் வில்லே போன்றவர்களை போலவே இருந்தார்.
சர்வதேச போட்டிகளில் இவர் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றே. இவரது தொழில் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தை கொண்டிருந்தார்,மேலும் இவர் மனம்கவர்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டராவும் திகழ்ந்தார்.இவர் ஐசிசியின் 2004-ஆம் ஆண்டிற்கான வளர்ந்துவரும் வீரர் என்ற விருதை வென்றபோதிலும் இவர் அணிக்கு திரும்புவதில் இன்னும் வெற்றி காணவில்லை.