3.ரிஷி தவான் (Rishi dhawan):
ஐபிஎல்-இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஒரு சிறந்த சாதனையை வைத்திருந்ததனால் இந்த இமாச்சல பிரதேச ஆல்ரவுண்டருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.இவர் ஹர்திக் பாண்டியாவின் வருகைக்கு முன்னர் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக அணியில் இடம் பிடித்தார்.இவர் 2013-14 காலக்கட்ட ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.அதனாலேயே, ஐபிஎல் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஒப்பந்தமானார்.
இவர் முதல்தர(First Class) போட்டிகளில் ஒரு சிறந்த பேட்டிங் ஆவரேஜ் 40.73 மற்றும் 59 போட்டிகளில் 248 விக்கெட்களையும், ஆரோக்கியமான 26 பவுலிங் ஆவரேஜையும் வைத்துள்ள போதிலும் வெறும் குறைந்த வாய்ப்புகளில் இவரது தேர்வை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை.
இவர் ஐபிஎல்-இல் கூடத் தற்போது இடம்பெறவில்லை.
4.பர்வேஷ் ரசூல் (Parvez Rasool):
காஷ்மீரில் பிறந்த இந்த ஆஃப் ஸ்பின்னர் (Off-Spinner), ரவீந்திர ஜடேஜா போன்றே பவுலிங் ஆல்ரவுண்டராகக் காணப்பட்டார்.2012-14 உள்நாட்டு தொடர்களில் இவர் தொடர்ச்சியாக விளையாடவில்லை.பின்பு மீண்டும், 2016-17 சீசனில் இருதொடர்களிலும் பங்குகொண்டு ஒவ்வொரு சீசனிலும் கிட்டத்தட்ட 600 ரன்களும் 60 பேட்டிங் ஆவரேஜும், கூடவே 30 விக்கெட்களையும் கைப்பற்றி ஒரு நல்ல ஆல் ரவுண்டராக விளங்கினார்.
2014-இல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும், 2017-இல் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகள் என இருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. இது ஒரு குறுகிய சர்வதேச போட்டி வாய்ப்பே ஆகும். மேலும் இவர் ஐபிஎல்-லும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.