5. அக்ஸர் பட்டேல் (Axar Patel):
இந்தக் குஜராத்திய இடக்கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இடம்பிடிக்க காரணம் ஐபிஎல் தான். இவர் ஐபிஎல்-இல் பஞ்சாப் அணியில் சிறிதளவு பங்களித்தபோது இக்கட்டான நேரங்களில் தனது திறமையை நிரூபித்தபோது அனைவராலும் அறியப்பட்டார்.
ஆனால் இவர் சர்வதேச அளவில் 38 போட்டிகளில் வெறும் 45 விக்கெட்களையே எடுத்துள்ளார். கடலை விட்டு வெளியே நீந்தும் மீனைப் போன்று சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தன் பேட்டிங் திறனையும் நிரூபிக்கத் தவறினார். ஓரளவு அணியில் இடம்பிடித்து பந்துவீச்சு பணியையே பெரிதும் நம்பிய இவர் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இணை வருகைக்குப் பின்னர் நிரந்தரமாகவே அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்கள் இல்லாத தாக்கத்தினால் பல வீரர்களைப் பயன்படுத்தி பார்த்தும் வேறு வழியின்றி தவித்த காலத்தில் ஒரு சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தியவரே ஹர்திக் பாண்டியா.இவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் கூறலாம். ஆனால், உண்மையில் இவர்கள் தங்கள் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தத் தவறினர் என்ற கருத்தே நிதர்சனமான ஒன்றாகும்.மேலும், இவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு அணியில் இனி கிடைக்கும் என்று கூறவும் முடியாது. இதனால் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தைத் தக்கவைத்தும் உள்ளார்.மேலும், இது போன்ற தாக்கத்தினை ஏற்படுத்தாத காரணத்தினாலேயே ஹர்திக் பாண்டியாவை போன்று எவரும் நிரந்தரமாக அணியில் ஜொலிக்க முடியவில்லை. நிச்சயமாக ஹர்திக் பாண்டியா 2019 உலகக்கோப்பையை வெல்ல பெரும் பங்கினை அளிப்பார் என நான் நம்புகிறேன்.
எழுத்து:
ராகுல் ஜெயின்
மொழியாக்கம்:
சே.கலைவாணன்