உள்ளூர் டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டர்களுக்காண மவுசு எப்போதும் அதிகம் தான். அதனாலேயே அவர்களை சற்றும் தயங்காமல் அதிக தொகையில் வாரி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், அந்தந்த அணியின் நிர்வாகங்கள். ஐபிஎல் தொடரின் 12வது சீசனுக்கான ஏலத்தில் ஆல்ரவுண்டர்களை எடுக்க ஒவ்வோர் அணியினரும் போட்டா போட்டி போட்டனர். மொத்தம் ஏலம் போன 60 வீரர்களில் 25 பேர் ஆல்ரவுண்டர்கள் என்பது வியக்கத்தக்க வகையில் உள்ளது. பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் ஜொலிக்கும் இவர்கள், ஒரு அணியை பலம் வாய்ந்ததாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு ஏலம் போன வீரராவார். பவுலிங் ஆல்ரவுண்டரான இவருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.4 கோடியை வாரி வழங்கியது. மேலும், சிவம் தப்பே, பிராத் வெயிட், சாம் கரன் மற்றும் அக்சர் பட்டேல் போன்றோர் நல்ல தொகைக்கு ஏலம் போன ஆல்ரவுண்டர்கள் ஆவர்.
அவ்வாறு இந்த ஐபிஎல் தொடரில் ஜொலிக்க உள்ள சிறந்த நான்கு ஆல்-ரவுண்டர்களில் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். அண்மைக்காலமாக இவர்களது செயல்பாட்டை பற்றி நன்கு ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட தொகுப்பு இது.
#4. பென் ஸ்டோக்ஸ்:
இந்த தலைமுறையின் சர்வதேச போட்டிகளில் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வருகிறார், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த சீசனில் வெறும் எட்டு விக்கெட்களையும் 196 ரன்களை மட்டுமே எடுத்து தனது மோசமான பார்மை வெளிப்படுத்தினார், பென் ஸ்டோக்ஸ்.
2017 ஆம் ஆண்டு தனது முதல் ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக இடம்பெற்று 12 விக்கெட்களையும் 316 ரன்களையும் குவித்து ஒரு வெற்றிகரமான பங்களிப்பை அளித்தார், ஸ்டோக்ஸ். இதனால் அந்த தொடரின் "மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்" என்ற விருதை தட்டிச் சென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களையும் 135 ரன்களையும் குவித்துள்ளார். இவரது இந்த நல்ல ஃபார்ம் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தால் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் லாபம்தான்.
#3.ஷேன் வாட்சன்:
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர், ஆஸ்திரேலியாவின் வாட்சன். கடந்த ஆண்டு முதல் முறையாக சென்னை அணிக்காக களம் இறங்கி மறக்கமுடியாத தொடரை ரசிகர்களுக்கு அளித்தார்,வாட்சன். மேலும் தொடரில் ஒட்டுமொத்தமாக 15 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதம் உட்பட 555 ரன்களை குவித்து அசத்தினார். இவர்தான் அந்தத் தொடரின் ஐந்தாவது அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் ஆவார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 332 ரன்கள் குவித்துள்ளார். இவர் தான் அந்தத் தொடரின் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர் ஆவார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 47.42 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 141.27 என்ற வகையிலும் அமைந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிக் பாஷ் தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக களம் இறங்கி 344 ரன்களையும் குவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். வலது கை பந்துவீச்சாளரான இவர், அனைத்து தரப்பு சர்வதேச போட்டிகளிலும் 291 விக்கெட்களை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.