#2. சுனில் நரைன் :
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் சுழற்பந்துவீச்சாளராக மட்டும் களம் இறங்கி வந்தவர், சுனில் நரைன். ஆனால், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங்கிலும் அதுவும் ஒரு தொடக்க வீரராக முத்திரை பதித்து வருகிறார். ஐபில் தொடரில் ஒவ்வொரு ரன்னாக ஓடி எடுக்காது, வெறும் பவுண்டரிகளால் மட்டுமே அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை இவர் வசம் தான் உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் களமிறங்கி 357 ரன்களை 189.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். மேலும், பந்துவீச்சில் 17 விக்கெட்டுகளை 7.65 என்ற எக்கனாமியுடன் வீழ்த்தியுள்ளார்.
இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் "மிகவும் மதிப்புவாய்ந்த வீரர்" என்ற விருதை தட்டிச் சென்றார். மேற்கண்ட காரணங்களால், இந்த ஆண்டு கொல்கத்தா அணி இவரை 8.5 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த பங்களதேஷ் பிரீமியர் லீக்கில், டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக களம் இறங்கி, 18 விக்கெட்களை 6.35 என்ற எக்கனாமிக்குடன் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 279 ரன்களை 143.07 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார். நிச்சயம் இந்த தொடரிலும் தனது உச்சகட்ட பார்மை வெளிப்படுத்தி கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல பாடுபடுவார் என எதிர்பார்க்கலாம்.
#1. ஆண்ட்ரே ரஸ்ஸல்:
குறுகியகால போட்டிகளில் மிகவும் அபாயகரமான வீரர்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே ரஸ்ஸல். இவர் பல்வேறு விதமான சாதனைகளை டி20 கிரிக்கெட்டில் புரிந்துள்ளார். மேலும், இவருக்கு டி20 கிரிக்கெட்டில் சிறந்த அனுபவமும் உண்டு. ஒட்டுமொத்தமாக 287 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4456 ரன்களும் 24.61 என்ற சராசரியையும் கொண்டுள்ளார். இவரது டி20 ஸ்ட்ரைக் ரேட் 166.57 என்ற வகையில் உள்ளது.
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்கி வரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர், கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். மேலும், பேட்டிங்கில் 316 ரன்களையும் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 184.79 என்று உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு இவரை தக்கவைத்துள்ளது, கொல்கத்தா அணியின் நிர்வாகம். சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக இடம்பெற்று 299 ரன்களையும் 14 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இவரின் முயற்சியால் அந்த அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு வரை முன்னேறியது. பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சரிசம பங்கு உடன் விளங்கும் இவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நிச்சயம் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக வலம் வருவார்.
எழுத்து: அபிஷேக அரோரா
மொழியாக்கம்: சே.கலைவாணன்.