வங்கதேசத்தில் உள்ள ஷேர்-இ பங்களா ஸ்டேடியம்-யில் வங்கதேசம் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3ஆவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டியில் தீவீர குழப்பம் நடைபெற்றது. மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஓஷேன் தாமஸ் வீசிய பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டான் தாஸ் கேட்ச் ஆகி அவுட் ஆனார். ஆனால் போட்டி நடுவர் தன்வீர் அகமது, ஓஷேன் தாமஸ் வீசிய பந்தை "Over Step" வைத்து வீசியுள்ளார் என்று சொல்லி "நோ பால்" வழங்கினார்.
உடனடியாக பெரிய திரையில் ஓஷேன் தாமஸ் வீசிய பந்துவீச்சு காண்பிக்கப்பட்டது. அதில் ஓஷேன் தாமஸ் பந்து வீசும் போது அவரது கால்கள் நோ பால் கோட்டினை தாண்டவில்லை என தெரிந்தது. அந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்டதை பார்த்து கொண்டு இருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி கேப்டன் கார்லோஸ் ப்ரத்வாட் உடனடியாக DRS ரிவியூ கேட்டார்.
பிறகு போட்டி நடுவர்கள் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணி கேப்டன் கார்லோஸ் ப்ரத்வாட் இடையே பேச்சுவார்த்தை நடந்த பின், போட்டி நடுவர் தன்வீர் அகமது லிட்டான் தாஸ் அவுட் என அறிவித்தார். அவுட் என அறிவித்த உடனே போட்டியின் நான்காவது நடுவர் மற்றும் "Match Refree" ஜெஃப் குரோவ் மேற்கிந்தியத்தீவுகள் அணி கேப்டனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு அவுட் கொடுக்கப்பட்டது மறுக்கப்பட்டு மறுபடியும் அந்த பந்து நோ பால்- பிரீ ஹிட் வழங்க வேண்டும் என அறிவித்து விட்டார் ஜெஃப் குரோவ்.
இந்த பிரச்சனையை மூன்றாம் நடுவர் கொடுத்த அறிக்கையின் படி போட்டி வர்ணனையாளர் கவுதம் பீமணி தெளிவாக அனைவரிடமும் மைக் மூலம் விவரித்தார். களத்தில் இருக்கும் நடுவர் நோ பால் என அறிவித்த பிறகு அதனை ரிவியூ செய்ய முடியாது என ஐசிசி விதிகள் 3.1.1. and 3.1.2யில் கூறப்பட்டுள்ளது.
ஐசிசி விதி 3.1.1 - ஒரு விளையாட்டு வீரர் களத்தில் இருக்கும் நடுவர் கூறிய தீர்ப்பில் ஏதானும் அக்கறை இருந்தாலோ அல்லது பேட்ஸ்மேன் அவுட் இல்லை என்றால் ரிவியூ கேட்கலாம். இந்த ரிவியூ பிளேயர் ரிவியூ (Player Review) எனப்படும். ஐசிசி விதி 3.1.2 பிளேயர் ரிவியூ - கேட்ச் செய்ததை மட்டுமே ஒரு பிளேயர், ரிவியூ செய்ய முடியும். மற்ற முடிவுகள் ரிவியூ செய்ய முடியாது எனப்படுவது.
இதில் மேலும் ஒரு உண்மை என்னவென்றால், மேற்கிந்தியத்தீவுகள் அணி கேப்டன் கார்லோஸ் ப்ரத்வாட் பெரிய திரையில் காண்பித்த "Replay" பார்த்துவிட்டு ரிவியூ கேட்டது ஐசிசி விதிகள் 3.2.3 படி செல்லாது.
ஐசிசி விதி 3.2.3 படி ட்ரெஸ்ஸிங் ரூம் அறிவுரை படி ரிவியூ கேட்பது, சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு தகுந்த படி ரிவியூ கேட்பது, பேட்ஸ்மேன் அல்லது அணியின் கேப்டன் தவிர மற்ற வீரர்கள் ரிவியூ கேட்பது செல்லாது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த பிரச்சனையால் போட்டி பத்து நிமிடம் நடக்காமல் இருந்தது. இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.