ஐ.பி.எல். 12 வது கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராத் கோலி தலைமையில் ராயல் சேலன்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
உலகத்தரம் வாய்ந்த வீரர்களான ஏ.பி.டி.வில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டீவ் ஸ்மித், லசித் மலிங்கா, கேன் வில்லியம்சன், ரஷித் கான் மற்றும் பலர் இந்தத் தொடரில் விளையாடவுள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளாக வீரர்கள் தங்கள் பேட்டிங் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். ரசிகர்கள் வரவிருக்கும் ஆண்டில் நினைவில் இருக்கும் சில ஆட்டங்களைக் காண்பார்கள். அத்தகைய சாதனைகள் எந்த வருடமும் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கும்.
# 1 ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்ஸர்கள்
ஐ.பி.எல். தொடரில் இதுவரை 292 சிக்ஸர்கள் அடித்து யாரும் நெருங்க முடியாத அளவில் உள்ளார் யுனிவர்சல் பாஸ் என்று கூறப்படும் கிறிஸ் கெயில். அதற்கு அடுத்தபடியாக டி.வில்லியர்ஸ் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் 186 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். சுரேஷ் ரெய்னா 185, ரோகித் சர்மா 184 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான சிக்ஸர்கள் வித்தியாசம் உள்ளது.
உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் 907 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் எந்த அணியும் கெயிலை எடுக்க முன்வரவில்லை. பின்னர் பஞ்சாப் அணி அடிப்படை விலைக்கு வாங்கியது. தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கும் கிறிஸ் கெயில் இன்னும் தனது சிக்ஸர்கள் வேட்டையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல வருடங்கள் அவரது சாதனையை முறியடிக்க சாத்தியமில்லை.
# 2 ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்
ஐ.பி.எல். தொடரில் 2013-ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக வரலாற்றில் யாரும் காணாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில். டி.வில்லியர்ஸ், விராத் கோலி, தில்சான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆனால் தனி ஒருவனாக புனே பந்துவீச்சை சிக்ஸ் மழை பொழிந்து 17 சிக்ஸர்கள் அடித்தார்.
2008-ஆம் ஆண்டு வரலாற்று தொடக்க ஐ.பி.எல். ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் ஒரு சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். அந்த போட்டியில் 13 சிக்ஸர்கள் அடித்தார். 5 வருடங்களுக்கு பின்னர் டெல்லி அணிக்கு எதிராக கெயில் 13 சிக்ஸர்கள் அடித்து சாதனையை சமன் செய்தார். 2016 ஆம் ஆண்டு எ.பி.டி.வில்லியர்ஸ் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 12 சிக்ஸர்கள் அடித்தார். கெயில் அடித்த 17 சிக்ஸர்கள் சாதனை 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் பல வருடங்கள் அந்த சாதனையை முறியடிக்க முடியாமல் போகும்.
# 3 ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்
புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆட்டத்தை கிறிஸ் கெயில் ஆடினார். அதிக சிக்ஸர்கள் அடித்தது மட்டுமல்ல, ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் அடித்தும் சாதனை படைத்தார். 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களை எடுத்தார். அந்த சாதனையை 175* ரன்கள் எடுத்து கெயில் முறியடித்தார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் டி20 போட்டிகளிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.
5 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆரோன் பிஞ்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் 172 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சாதனையை தவற விட்டார். இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாத அளவில் இருந்து வருகிறது.
# 4 வேகமான சதம்
ஒரு இன்னிங்ஸில் 17 சிக்சர்கள் அடித்தது மட்டுமல்லாது, அதே போட்டியில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் யூசுப். ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக சதத்தை எடுத்த யூசப்பதான் சாதனையை, 30 பந்துகளில் சதம் அடித்து கிறிஸ் கெயில் முறியடித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யூசுப் பதான் 2010 ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது 37 பந்துகளில் சதம் அடித்தார். டேவிட் மில்லர் 2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக 38 பந்துகளில் சதம் அடித்தார். அந்த சாதனையை இறுதியில் கிறிஸ் கெயில் முறியடித்துள்ளார்.
எழுத்து- சாஷாங் ஸ்ரீவஸ்தவா
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்