ஐ.பி.எல். திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளனர். கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மட்டும் விளையாடினால் போதாது. அணிக்குப் பந்துவீச்சாளர்கள் முக்கியமானவர்கள். 20 ஓவர்கள் விளையாடும் குறுகிய கால போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் பங்கு அணிக்கு மிக முக்கியமானது.
ஐ.பி.எல். தொடரில் பல உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான மெக்ராத், ஷேன் வார்ன், மகாயா நிட்னி, சோயிப் அக்தர், முத்தையா முரளிதரன் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் விளையாடியுள்ளனர். அவர்கள் ஒரு சில லீக் போட்டியில் தங்களின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர்.
# 5 ஹர்பஜன் சிங்
ஐ.பி.எல். தொடரில் முதல் சீசனில் இருந்து இதுவரை ஒரு சிறந்த வீரராக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஹர்பஜன் சிங். பவர் ப்ளே ஓவர்களில் பந்து வீசும் ஒரு சிறந்த ஆஃப் ஸ்பின்னர். நடுத்தர ஓவர்களில் அணிக்கு தேவைக்கு ஏற்ப பந்துவீசி வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சில போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
149 ஐ.பி.எல் போட்டிகளில் 134 விக்கெட்கள் எடுத்துள்ளார். 7.08 எகானமி ரேட். 38 வயதான ஹர்பஜன் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக டாட் பந்துகளான 1,128 பந்துகள் வீசியுள்ளார்.
# 4 டுவைன் பிராவோ
ஐ.பி.எல். தொடர்களில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக பிராவோ கருதப்படுகிறார். அவரது துல்லியமான மற்றும் வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு ரன்கள் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல விக்கெட் எடுக்கும் வகையிலும் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2008 முதல் 2010 வரை மூன்று சீசன்களில் விளையாடி பிராவோ பின்னர் 2011-ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்கியது. 35 வயதான பிராவோ ஐ.பி.எல். தொடரில் 136 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் 100 விக்கெட்டுகளையும், 1000 ரன்களுக்கும் மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
# 3 பியுஷ் சாவ்லா
ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார் பியுஷ் சாவ்லா. ஒரு தந்திரமான லெக் ஸ்பின்னர் ஆவார். எதிரணி பேட்டிங் வரிசையை துன்புறுத்துவதற்கு அனைத்து சூழ்நிலைகளிலும் பந்துவீசும் திறமை கொண்டவர். சாவ்லா பந்துவீச்சு திறமை மட்டுமல்ல சில சமயம் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சாவ்லா 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 143 ஐ.பி.எல் போட்டிகளில் சாவ்லா 26.23 பவுலிங் சராசரி கொண்டு 140 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
# 2 அமித் மிஸ்ரா
மூத்த வீரரான அமித் மிஸ்ரா இந்த தலைமுறையின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களாக கருதப்படுபவர். ஐ.பி.எல். டி-20 போட்டிகளில் அமித் மிஸ்ரா அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
இதுவரை 136 ஐ.பி.எல். போட்டிகளில் 146 விக்கெட்கள் எடுத்துள்ளார். 24.14 பவுலிங் சராசரி, எகானமி ரேட் 7.39. ஸ்ட்ரைக் ரேட் 9.59.
# 1 லசித் மலிங்கா
லசித் மலிங்கா பெரும்பாலும் குறைந்த ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மலிங்கா தனித்துவமான ஆட்டக்காரர். சிறப்பாக யார்க்கர் வீசும் திறமை கொண்டவர்.
இலங்கை அணியை சேர்ந்த மலிங்கா 110 ஐ.பி.எல். போட்டிகளுக்கு 154 விக்கெட்கள் எடுத்துள்ளார். எகானமி ரேட் 6.86, ஸ்ட்ரைக் ரேட் 16.61, பவுலிங் சராசரி 19.06. அனைத்து ஐ.பி.எல். தொடர்களிலும் மும்பை அணிக்கு பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எழுத்து-ரிசப் சிங் ரவாத்
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்