நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் பிடித்த அற்புதமான காட்சி. வீடியோ உள்ளே

Dinesh Karthick's Catch
Dinesh Karthick's Catch

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நியூசிலாந்து அணியை முதலில் ஆடுமாறு அழைத்தார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அபார ஆட்டத்தினால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 219 ரன்கள் குவித்தது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் வழங்குவது இந்திய அணிக்கு இதுவே முதல் முறையாகும்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் மற்றும் சங்கர் நல்ல தொடக்கம் கண்டாலும் அவர்கள் அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற இயலவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெற்றி பெற முடியாத நிலை. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறத்தில் தோனி தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன் விகித அடிப்படையில் இந்திய அணி அடைந்த படு மோசமான தோல்வி இதுவாகும்.

இந்திய அணி தரப்பில் போலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் என முத்தரப்பு சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினார். ஹர்திக் பாண்டியா தான் வீசிய 4 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கினார். கலீல் அஹ்மது 48 ரன்களும் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 47 ரன்களும் வாரி வழங்கினர். ஈஸ்வர் குமார் ஒரு டி20 இன்னிங்சில் புவனேஷ்வர் குமார் ரன்கள் இதுவாகும்.

இந்திய அணி தரப்பில் பந்துவீசிய 5 பந்துவீச்சாளர்கள் 35 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார் டி20 வரலாற்றில் இந்திய அணி பந்துவீசிய 5 பந்துவீச்சாளர்கள் ஒரு இன்னிங்ஸில் 35 ரன்களுக்கு மேல் எது இது இரண்டாவது முறையாகும்.

இந்திய அணி பீல்டிங்கிலும் சொதப்பியது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த எளிதான இரண்டு கேட்சுகளை நழுவவிட்டார். அவர் அந்த இரண்டு கேட்சுகளை பிடித்திருந்தால் இந்திய அணி நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்கு சுருட்ட வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.

தினேஷ் கார்த்திக் இரண்டு கேட்சுகளை தவறவிட்டாலும் பவுண்டரி லைனில் மிகவும் அற்புதமான கேட்ச் பிடித்தார். பதினைந்தாவது ஓவர் கடைசி பந்தை ஹர்திக் பாண்டியா வீசினார். அதனை நியூசிலாந்து வீரர் கை அடிக்க முயற்சித்தார் தமிழ் நின்றுகொண்டிருந்த தினேஷ் கார்த்திக் அதனை அபாரமாக கேட்ச் பிடித்து பவுண்டரி லைனில் கால் படும் போது அதனை தூக்கிப் போட்டு மறுபடியும் காலெடுத்து அந்தக் கேட்ச் டைவ் அடித்து பிடித்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் இது மட்டுமே ஆகும்.

இந்த வீடியோ ட்விட்டர் உலகத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக...

Quick Links

Edited by Fambeat Tamil