அம்பதி ராயுடுவின் 4D

அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு

காய்ச்சல் காரணமாக தோனிக்கு பதிலாக ராயுடு மும்பைக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்ததன் மூலம் தன்னை 4டி வீரராக புரோமோட் செய்துள்ளார் என பலரும் கூறிப்பாக நெட்டிசன்களும் வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உலகக்கோப்பையில் புறக்கணிக்கப்பட்ட ராயுடு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி நடக்கவுள்ளது. இந்த உலக கோப்பை இந்திய அணி தேர்வில் கிட்டத்தட்ட 14 வீரர்கள் ஏறத்தாழ ஏற்கனவே தேர்வு செய்யப் பட்டநிலையில்,15 வது வீரராக யாரை தேர்வு செய்வது என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய தலை வழியாக இருந்தது. இந்த 15 வது வீரருக்கான ரேசில் விஜய் சங்கர் மற்றும் அம்பதி ராயுடு முன்னிலையில் இருந்தனர். இப்போட்டியில் விஜய சங்கர் ராயுடுவை பின்னுக்கு தள்ளி இந்திய அணியில் இடம் பிடித்தார்.

விஜய சங்கரை தேர்வுக்கான காரணம் குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறுகையில் விஜய் சங்கர் மூன்று பிரிவிலும் 3D(பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்) சிறந்து விளங்குவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என கூறினார். விஜய் சங்கர் குறித்து ஆங்கிலத்தில் ‘‘Vijay Shankar offers is three dimension’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

விமர்சனம் செய்த ராயுடு

இந்நிலையில் இந்திய அணியில் புறக்கணிப்பட்டது குறித்து அம்பதி ராயுடு தனது அதிருப்தியை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராயுடு வெளியிட்டுள்ள பதிவில், ‘உலகக்கோப்பையை பார்க்க தற்போது புது செட் 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன்.’ என குறிப்பிட்டிருந்தார்.

கீப்பராக ராயுடு

நேற்று ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் எல் கிளாசிகோ என வர்ணிக்கப்படும் போட்டியில் மோதின. தோனி விலகியதால் அவருக்கு பதிலாக அம்பதி ராயுடு விக்கெட் கீப்பர் பணியை ஏற்றார்.

ராயுடுவை பொருத்தவரை அவர் இந்திய அணிக்கு பேட்ஸ்மேனாகவே செயல் பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அறிமுகமானாலும், 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்திய அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். அது வெகு காலம் நீடிக்கவில்லை. தனது மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய உலக கோப்பை அணியில் நேரடியாக இடம் பெறாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

33 வயதான ராயுடு இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1694 ரன்கள் மற்றும் 47 ஆவரேஜுடம் பேட்ஸ்மேன்களுக்கான ஒருநாள் தரவரிசையில் 48 வது இடத்தில் உள்ளார். தேவைப்படும் சமயங்களில் பந்து வீசும் திறமையும் உடையவர் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு நல்ல பீல்டரும் கூட, இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கீப்பிங் செய்துள்ளார் பின்னர் காயங்களால் கீப்பிங் செய்வதை தவிர்த்தார். நேற்றைய போட்டியில் கீப்பிங் செய்ததன் மூலம் நான் 4D ப்ளேயர் என தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தெரித்திருக்கிறார் என முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Quick Links

Edited by Fambeat Tamil