மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நேற்று (ஏப்ரல் 25) மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அந்த அணியின் வீரர்கள் பின் வருமாறு:
ஜேஸன் ஹால்டர்(கேப்டன்), ஷை ஹோப், கிறிஸ் கெய்ல், ஈவின் லிவிஸ், ஆன்ரிவ் ரஸல், ஷீம்ரன் ஹட்மைர், நிக்கலஸ் பூரான், ஆஸ்லி நர்ஸ், கரோலஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஃபேபியன் ஆலன், கேமர் ரோச், ஓஸானே தாமஸ், ஷை ஹோப், ஷேனான் கேப்ரியல், ஷேல்டன் கட்ரில்லா.
கிறிஸ் கெய்லுக்கு இது 5வது உலகக் கோப்பையாகும், ஆன்ரிவ் ரஸல், கேமர் ரோச், டேரன் பிராவோ ஆகியோருக்கு இது 3வது உலகக் கோப்பையாகும், ஜேஸன் ஹால்டருக்கு இது 2வது உலகக் கோப்பையாகும்.
சுனில் நரைனை மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சேர்க்கப்படவில்லை. காரணம் அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் 10 ஓவர்களை வீச மிகவும் சிரமப் பட வாய்ப்புள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அல்சாரி ஜோசப்பையும் அணியில் சேர்க்கப்படவில்லை.
கீரன் பொல்லார்ட், ரோவ்மேன் பொல்லார்ட், மர்லன் சாம்யல்ஸ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் அணி முற்றிலும் நிலைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை மட்டுமே அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. கிறிஸ் கெய்ல், ஆன்ரிவ் ரஸல், ஈவின் லிவிஸ், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரை கொண்டு வலிமையாக பேட்டிங் வரிசையாக திகழ்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. சமீபத்தில் ஷை ஹோப் மற்றும் டேரன் பிராவோ ஆகியோரது பேட்டிங்கும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக உள்ளது.
கிறிஸ் கெய்ல் மற்றும் ஈவின் லிவிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷை ஹோப் 3வது வரிசையிலும், 4வது பேட்ஸ்மேனாக டேர்ன பிரவோவும் களமிறங்குவர். அதன்பின் ஷீம்ரன் ஹட்மைர், ஜேஸன் ஹோல்டர், ஆன்ரிவ் ரஸல் மற்றும் கரோலஸ் பிராத்வெய்ட் ஆகியோர் களமிறங்குவார்கள்.
நிக்கலஸ் பூரான் மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருட தொடக்கத்தில் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் 424 ரன்களை விளாசியதன் காரணமாகவே கிறிஸ் கெய்ல் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். ஈவின் லிவிஸ் உலகக் கோப்பைக்கு முன் அதிக பயிற்சியை மேற்கொள்வது அவசியமானது ஆகும். டேரன் பிராவோ இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் ஓடிஐ அணியில் இடம்பெற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஆன்ரிவ் ரஸல் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா அணிக்காக 10 போட்டிகளில் பங்கேற்று 392 ரன்களை விளாசியுள்ளார். இவரை பேட்டிங்கில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். அதே சமயத்தில் இவரது காயத்திலும் அதிக கவனம் தேவைப்படுகிறது.
கேமர் ரோச், ஜேஸன் ஹோல்டர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஒஸானே தாமஸ், ஷேனான் கேப்ரியல், ஷேல்டன் கட்ரில்லா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ஒஸானே தாமஸ் 9 விக்கெட்டுகளையும், ஷேல்டன் கட்ரில்லா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். ஷேல்டன் கட்ரில்லா மட்டுமே இடதுகை வேகப்பந்து வீச்சாளர், மற்ற அனைத்து பௌலர்களும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவர்.
ஆஃப் ஸ்பின் ஆல்-ரவுண்டர் ஃபேபியன் ஆலன் மற்றும் அஸ்லி நர்ஸ் ஆகியோர் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்து உள்ளனர். தேவேந்ர பிஸோ-வை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை.
உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஏதேனும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு காத்திருப்பு வீரர்களாக யாரும் அறிவிக்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியே உலகக் கோப்பைக்கு செல்லும். அனுபவ வீரர்களுடன் களமிறங்க உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி டாப்-4 அணிகளுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும். இங்கிலாந்து மைதானத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடததான் காரணமாக வேகப்பந்து வீச்சாளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
ஆன்ரிவ் ரஸல், கேமர் ரோச், கிறிஸ் கெய்ல், ஈவின் லிவிஸ் ஆகியோரது ஃபிட்னஸிலும் மேற்கிந்தியத் தீவுகள் மருத்துவக்குழு அதிக கவணம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.