நடந்தது என்ன?
ரஞ்சிக் கோப்பையில் ஆந்திரப் பிரதேச அணிக்காக பங்கேற்று வரும் புத்மூறு நாகராஜூ என்பவர், இந்திய தேர்வுக்குழு தலைவர் MSK பிரசாத் போல தொலைபேசியில் பேசி மக்களிடம் பணம் பறித்து ஏமாற்றிய குற்றத்திற்காக விஜயவாடா போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் படி நாகராஜூ விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் அகாடமி அமைப்பதற்காக இந்திய தேர்வுக்குழு தலைவர் பிரசாத் போல தொலைபேசியில் மாற்று குரலில் மக்களிடமும் பல நிறுவனங்களிடமும் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.
பிண்ணனி
ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அன்கிடு, நாகாராஜூ-வை பற்றி கூறியதாவது: நாகராஜூ உள்ளுர் கிரிக்கெட்டில் அதிக சாதனைகளை செய்து உள்ளார். இதனால் இவருக்கு நிறைய நிறுவனங்களிலிருந்து ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. இவர் நல்ல ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருப்பினும் 2018ல் சுலபமாக பணம் சம்பாதிக்க விரும்பினார். இதனால் தவறான வழிமுறையை பணம் சம்பாதிப்பதில் கையாள திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே மக்களை ஏமாற்றிய குற்றத்திற்காக இவர் மீது பல குற்றங்கள் வந்த வண்ணம் இருந்தது.
கதைக்கரு
காவல் அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு தெரிவித்தவதாவது: பரிசளிப்பு விழாவில் MSK பிரசாத்-தின் குரலை மிகவும் நுண்ணியமாக கவணித்து வந்தார் நாகராஜூ. MSK பிரசாத் போல பேசி நன்றாக பயிற்சியும் எடுத்துக் கொண்டார். அத்துடன் "ட்ரூ காலர்" என்னும் செயலியில் தனது அலைபேசி எண்ணின் சுயவிவரத்தில் MSK பிரசாத் என பெயரும் மாற்றிக் கொண்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர் முதலில் என்.கோபால் என்பவரிடம் விசாகப்பட்டினத்தில் "தோனி கிரிக்கெட் அகாடமி" என்று ஆரமிப்பதாக கூறி பணம் பறித்துள்ளார்.
அத்துடன் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவதாக கூறி ரூபாய் 2.8 லட்சத்தையும் அவரிடமிருந்து வாங்கியுள்ளார். பின்பு MSK பிரசாத் பெயரை உபயோகப்படுத்தி ராமகிருஷ்ணா ஹாவ்சிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 3.88 லட்சம் பணம் பறித்துள்ளார்.
தான் இந்திய தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேசுவதாக கூறி பல மக்களிடம் பணம் பறித்துள்ளார் நாகராஜூ. இருப்பினும் இவரது இந்த ஏமாற்றுத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விஜயவாடா போலிஸ் அவரை நுண்ணியமாக கவணித்து கைது செய்துள்ளது. நாகராஜூவை கானவாரம் விமான நிலையத்தில் விஜயவாடா போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
மேலும் விஜயவாடா காவல்துறையினர், மக்களிடம் சற்று விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோல் தெரியாத நபர்களின் எண்களிலிருந்து யார் எந்த குரலில் பேசினாலும் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
அடுத்தது என்ன?
2016ல் நாகராஜூ கிரிக்கெட் வலைபயிற்சியில் அதிக நேரம் தொடர்ந்து விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திறன் கொண்ட வீரர் பணத்திற்காக மிகவும் கேவலமான செயலான குரல் மாறாட்டம் செய்து கிரிக்கெட் உலகிற்கு பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.