ஐபிஎல் தொடர் என்றாலே அதிரடி வீரர்களுக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு அணியிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று அதிரடி வீரர்கள் இருப்பார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி என்றாலே முதலில் நமக்கு ஞாபகத்தில் வருவது மேற்கிந்திய தீவுகள் அணி தான். காரணம் அந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள 11 வீரர்களும் சிக்சர் அடிக்க கூடிய திறமை படைத்தவர்கள்.
எந்த சூழ்நிலையிலும் போட்டியை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள். அதே போல் தான் ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் இடம்பெற்று வருகின்றனர். இன்று வரை ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டக்காரர் வீரர்களின் பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் கிறிஸ் கெயில், பொல்லார்டு, பிராவோ, ரசல், போன்ற அதிரடி வீரர்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் கொல்கத்தா அணியின் முக்கிய அதிரடி வீரர் ரசல். இவரது சிறப்பான 3 இன்னிங்ஸ்கள் பற்றி இங்கு காண்போம்.
#3) கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி:
ஆண்ட்ரே ரசல் – 39 ( 24 )
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதினர். அதில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 52 ரன்களை விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பெங்களூர் அணி 185 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை கொல்கத்தா அணி சேஸ் செய்யும் பொழுது தொடக்கத்திலிருந்தே தடுமாறி வந்தது. 10 ஓவர்களின் முடிவில் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா அணி. இறுதியில் வந்து அதிரடியாக 4 சிக்சர்களை விளாசிய ரசல் 24 பந்துகளில் 39 ரன்களை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ரசல்.
#2) கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி:
ஆண்ட்ரே ரசல் – 66 ( 36 )
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின், இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது கொல்கத்தா அணி. பஞ்சாப் அணியின் ஜார்ஜ் பெய்லி அதிரடியாக 60 ரன்களை விளாச, இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 155 ரன்களை எடுத்தது. இந்த இலக்கை கொல்கத்தா அணி சேஸ் செய்யும் பொழுது தொடக்கத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்பு யூசுப் பதான் மற்றும் ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். மிகச் சிறப்பாக விளையாடிய ரசல் 36 பந்துகளில் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
#1) கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி:
ஆண்ட்ரே ரசல் – 88 ( 36 )
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதினர். இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் 10 ஓவரிலேயே 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா அணி. அதன் பின்பு பேட்டிங் செய்ய வந்த ரசல் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதிரடியாய் 11 சிக்சர்களை விளாசிய ரசல், 36 பந்துகளில் 88 ரன்களை விளாசினார். அதுவும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த டெத் பவுலரான பிராவோ ஓவரை வெளுத்து வாங்கினார். பிராவோ வீசிய 3 ஓவர்களில் 50 ரன்களை விளாசினார் ரசல்.