இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ட்ரேவர் பைலிஸ் நிருபர்களிடம், ஆர்ச்சர் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி மேற்குஇந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவு பெற்ற நிலையில், டி20 போட்டிகள் நடந்துவருகிறது. டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்குஇந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டது. இதில் மூன்றாம் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. மற்ற போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு போட்டிகள் வென்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நிருபர்களிடம் கூறியதாவது நாங்கள் விழித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது, எங்களது பௌலிங் பெரிதாக எடுபடவில்லை.
அடுத்துததாக உலகக்கோப்பைக்கு முன் பாகிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளோம். அதில் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ஏப்ரல் 23-குள் எங்களது அணியை தேர்வு செய்ய முடிவு செய்தோம். ஆனால் உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க கடைசி நாள் மே 22 தான் . இதற்கிடையே ஒருமாதம் இருப்பதால் பாகிஸ்தான் அணியுடன் நடக்கவிருக்கும் தொடரில் ஆர்ச்சர் இடத்தை குறித்து ஆலோசிக்கவேண்டும் என ஸ்கை ஸ்போர்ட்ஸ்கு ட்ரெவர் பேட்டியளித்தார்.
ஆர்ச்சர் பற்றி நாம் அறியவேண்டியது
ஜோப்ரா ஆர்ச்சர் பார்படோஸில் (மே.இ தீவுகள்) பிறந்தவர். தற்போது இங்கிலாந்தில் குடிப்பெயர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாகம் முன்னதாக தங்களது சர்வதேச அணியில் இடம்பெற 7 வருடம் முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற விதிகளை வைத்திருந்தது. அதை தற்போது 3 வருடமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஆர்ச்சர் இடம்பெற தகுதி அடைந்துள்ளார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் உலகம் முழுவதும் நடக்கும் தொடர்களில் பங்கேற்று அதிகப்படியான அனுபவம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் பலவீனம்
தற்போது மேற்கு இந்திய தீவுகளுடன் நிறைவடைந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்தின் பௌலிங் பெரிதாக எடுபடவில்லை. உலககோப்பைக்கு முன் இதை சரிப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த குறையை சரி செய்ய ஆர்ச்சர் ஓர் சிறந்த வீரராக இருப்பார். இவரது பௌலிங் திறமையை அனைவரும் அறிவர். ஆட்டத்தின் துவக்கம், முடிவு மற்றும் இடைப்பட்ட நேரங்கள் என அனைத்து இடத்திலும் சிறப்பாக பந்துவீசும் ஆற்றல் பெற்றவர் ஆர்ச்சர். பாகிஸ்தான் அணியுடன் நடக்கவிருக்கும் தொடரில் இவரை அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார் தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பைலிஸ்.
உலகக்கோப்பை 2019 இங்கிலாந்து & வேல்ஸில் நடக்கவுள்ளது, மேலும் உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அவர்களிடம் இருக்கும் இந்த குறையை தீர்த்தால் நிச்சயமாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துவிடும். ட்ரெவரின் பேட்டியை வைத்து பார்க்கையில் நிச்சயமாக ஆர்ச்சர் உலககோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார் என நம்பலாம். உலககோப்பைக்கு முன் கடைசியாக பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி மோதவுள்ளது அதில் ஆர்ச்சர் இடம்பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
எழுத்து : கமல்
மொழியாக்கம் : காமாட்சி சுந்தரம்