ஐ.சி.சி உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துக்கு உதவுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர் 

அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்துக்கு உதவுகிறார். கிட்டத்தட்ட அனைத்து பேட்டிங் சாதனைகளையும் தனக்கு சொந்தமாகக் கொண்டவர் சச்சின் டெண்டுல்கர், ஆனால் அவரது மகன் பந்து வீச்சாளராக பிரகாசிக்க விரும்புகிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு இடது கை வேகப் பந்து வீச்சாளர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்ச்சியின் போது பெரிய உதவியாக இருந்தார். தனது ஸ்வீங் பந்துகள் மூலம் இங்கிலாந்து அணியை பயிற்ச்சியில் மிரட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெரிய போட்டிக்குக்கு முன்னதாக இவரது பந்து வீச்சு இங்கிலாந்து அணியினருக்கு பெரிய உதவியாக இருக்கின்றது.

இங்கிலாந்து அணியின் வலை பயிற்சியில் அர்ஜுன் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் திங்களன்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு வலையில் பந்து வீசினார். தனது திறமையான பந்து வீச்சின் மூலம் பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆரஞ்சு நிற சட்டை அணிந்த அர்ஜுன், இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் சக்லைன் முஷ்டாக்கின் கண்காணிப்பின் கீழ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவதைக் காண முடிந்தது.

அர்ஜுன் இங்கிலாந்துக்காக வலையில் பந்து வீசுவது இது முதல் முறை அல்ல. 2015 ஆம் ஆண்டில், 15 வயதின் போதே அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வலையில் பந்து வீசும் பந்து வீச்சாளர்களின் குழுவில் ஒருவராக இருந்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டுக்கு இங்கிலாந்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது.

எம்.சி.சி அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர்

19 வயதான அர்ஜுன், சர்ரே இரண்டாம் லெவன் அணிக்கு எதிராக எம். சி. சி இளம் கிரிக்கெட் வீரர்கள் அணிக்காக விளையாடியுள்ளார், கடந்த வாரம் ஹை வைகோம்பில் நடந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் தனது இரண்டாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் நாதன் டில்லிக்கு தனது ஸ்விங் பந்து வீச்சின் மூலம் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டானது இணையதளங்களில் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது. டில்லியின் ஸ்டம்புகளைத் தொந்தரவு செய்த அர்ஜுன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் பிபிஏ கெட்ஸை வெளியேற்றினார், இந்த போட்டியில் 11-2-50-2 என்ற சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார் அர்ஜூன் டெண்டுல்கர்.

இவர் கடந்த ஆண்டு இளைஞர் டெஸ்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த மாதம், அர்ஜுன் மும்பை டி 20 லீக்கில் ஆகாஷ் புலிகள் அணிக்காக பங்கேற்றிருந்தார், இந்த தொடரில் அதிக பட்ச விலையான 5 லட்சம் ரூபாய்க்கு விலை போனார் அர்ஜுன் டெண்டுல்கர். ஸ்ட்ராப்பிங் இளையோர் 2017-18 கூச் பெஹார் டிராபியில் மும்பை 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐந்து ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான தொடரின் போது இந்திய அணி வீரர்களுக்கும் இவர் வலைப் பயிற்சியில் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஆல் ரவுண்டரான அர்ஜூன் விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

App download animated image Get the free App now