இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 1 தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த ஆஷஸ் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்க்கு முன்பாக நடைபெற்ற ஐ.சி.சி உலககோப்பை கிரிக்கெட் தொடரையும் இங்கிலாந்து அணி தங்களின் சொந்த மண்ணிலேயே முதன் முறையாக வென்று அசத்தினர். இந்த நிலையில் உலககோப்பை சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸதிரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் விளையாட உள்ளனர்.
இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர் பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வரும் மிகவும் முக்கியமான கிரிக்கெட் தொடர் இந்த ஆஷஸ் போட்டிகளில் இரு அணி வீரர்களுமே நீயா? நானா? என்ற போட்டியுடன் விளையாடுவார்கள் என்பதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்ககாது. இந்த நிலையில் இந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலியா அணியின் வீரர்களின் விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியில் ஒரு ஆண்டு தடைக்கு பின்னர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள நிலையிலும் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டனாக டிம் பைன் தொடர்ந்து விளையாட உள்ளார். டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகின்றது. ஆஸ்திரேலியா அணியில் பேட்மேன்கள் வரிசையில் டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், உஸ்மான் காவாஜா, மிட்செல் மார்ஸ் மற்றும் ஜேம்ஸ் பேட்டிஸ்சன் ஆகியோர் உள்ளனர். அதே போல் பந்து வீச்சிலும் பலமான வீரர்களுடன் காணப்படுகிறது ஆஸதிரேலியா அணி. ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மிங்ஸ், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் டிம் பைன், பிட்டர் சிடில், மைகேல் நேசர் மற்றும் மார்கஸ் லபுஷாங்கே போன்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் பேட்டிங்கை காட்டிலும் பந்து வீச்சிற்கு அதிகம் கவனம் செலுத்தப்படும் விதமாக அதிக பந்து வீச்சாளர்களை கொண்டு களம் காண்கிறது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியா அணி இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த ஆஷஸ் தொடரில் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்த அணியின் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆஷஸ் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி நடந்து முடிந்த உலககோப்பை தொடரில் சாம்பியன் ஆன உற்சாகத்தில் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் உலககோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியிடம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.
அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அந்த போட்டியை வென்றது இங்கிலாந்து அணி. இந்த நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி ஜோ ரூட் தலைமையில் களம் காண்கின்றது. இந்த இங்கிலாந்து அணியில் உலககோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த முக்கிய வீரர்கள் இந்த ஆஷஸ் தொடரிலும் இடம் பெற்றுள்ளனர். பலம் வாய்ந்த பேட்மேன்களுடன் இங்கிலாந்து அணி களம் இறங்குகிறது. ஜேன்னி பேர்ஸ்ரோ, ஜெசன் ராய், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிரிஸ் வோக்ஸ், பெர்ன்ஸ், டென்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பந்து விச்சில் இங்கிலாந்து அணியின் ஜாம்பாவன்கள் ஜீம்மி ஆன்டர்சன், ஸ்வார்ட் ப்ராடு, சாம் க்ரான், ஒல்லி ஸ்டோன் மற்றும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ள ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். புகழ் பெற்ற ஆஷஸ் தொடரில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார் உலககோப்பையின் சூப்பர் ஓவர் ஹீரோ ஜோப்ரா ஆர்ச்சர்.