ஆஷஸ் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி நடந்து முடிந்த உலககோப்பை தொடரில் சாம்பியன் ஆன உற்சாகத்தில் இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் உலககோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியிடம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.
அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அந்த போட்டியை வென்றது இங்கிலாந்து அணி. இந்த நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி ஜோ ரூட் தலைமையில் களம் காண்கின்றது. இந்த இங்கிலாந்து அணியில் உலககோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த முக்கிய வீரர்கள் இந்த ஆஷஸ் தொடரிலும் இடம் பெற்றுள்ளனர். பலம் வாய்ந்த பேட்மேன்களுடன் இங்கிலாந்து அணி களம் இறங்குகிறது. ஜேன்னி பேர்ஸ்ரோ, ஜெசன் ராய், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிரிஸ் வோக்ஸ், பெர்ன்ஸ், டென்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பந்து விச்சில் இங்கிலாந்து அணியின் ஜாம்பாவன்கள் ஜீம்மி ஆன்டர்சன், ஸ்வார்ட் ப்ராடு, சாம் க்ரான், ஒல்லி ஸ்டோன் மற்றும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ள ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். புகழ் பெற்ற ஆஷஸ் தொடரில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார் உலககோப்பையின் சூப்பர் ஓவர் ஹீரோ ஜோப்ரா ஆர்ச்சர்.