நடந்தது என்ன?
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் டெத் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினால் அவர்களை அசோக் தின்டா-வுடன் ஒப்பிட்டு சிலர் இகழ்ந்து வந்தனர். தற்போது இதற்கு பதிலடி தரும் விதமாக தன்னுடைய உள்ளுர் டி20 சாதனைகளை பெருமையாக இன்ஸ்டாகிராமில் புகைப்பட வடிவில் வெளியிட்டு தன்னை இகழுபவர்களின் வாயை அடைத்துள்ளார் அசோக் தின்டா.
உங்களுக்கு தெரியுமா...
கடந்த இரு வாரங்களாக "தின்டா அகாடமி" என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் பெரும் அளவில் வைரலாகி கொண்டுள்ளது. இதில் உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் போன்றோரை வைத்து அதிகம் இகழப்பட்டது. 2019 ஐபிஎல் தொடரில் உமேஷ் யாதவ் மற்றும் உனட்கட் ஓவரை பேட்ஸ்மேன்கள் வெலுத்து வாங்குகின்றனர். கடந்த கால ஐபிஎல் தொடரில் அசோக் தின்டா எப்படி தனது பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கினாரோ அதேபோல் இவர்களும் தங்களது பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குகின்றனர் என சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் இதனை கருத்து சித்திரமாகவும், மீம்ஸ்-களாகவும் சிலர் வெளியிட்டு வந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் "டின்டா அகாடமி" என்ற பெயரில் அசோக் தின்டா-வை இகழந்து வந்தது. இது மேலும் அதிக வைரல் ஆனது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் 24 ரன்களை மகேந்திர சிங் தோனி விளாசினார். ஆனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். இதனால் இகழுபவர்களின் வாயை அடைக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் "டின்டா அகாடமியா? அப்படி என்றால் என்ன?" என்று உமேஷ் யாதவின் புகைப்படத்தை வெளியிட்டு டிவிட் செய்திருந்தது.
கதைக்கரு
அனைத்து மீம்ஸ்-களும் தன்னை மையமாக வைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதால் அசோக் தின்டா பெரும் வேதனைக்கு உள்ளனார். வேகப்பந்து வீச்சாளரான இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னை இகழுபவர்களின் வாயை அடைத்துள்ளார்.
அசோக் தின்டா தன்னை இகழுபவர்களுக்கு கூறியதாவது: தன்னுடைய கடந்த கால டி20 ஆட்டத்திறனை பாரத்துவிட்டு என்னை இகழுங்கள். உங்களுடைய இகழ்சியை நான் ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
"நான் என்னுடைய பௌலிங் புள்ளிவிவரங்களை உங்கள் பார்வைக்கு முன்னே சமர்பித்து உள்ளேன். இது என்னுடைய ஆட்டத்திறனை பற்றி தெரியாமலேயே இகழந்துவரும் சிலருக்காகவே இதனை வெளியிட்டு உள்ளேன். இதனை பார்த்துவிட்டாவது இகழுபவர்கள் அமைதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன்". என்று இன்ஸ்டாகிராமில் தான் வெளியிட்ட புகைப்படங்களின் கீழ் தலைப்பாக கொடுத்துள்ளார்.
அடுத்தது என்ன?
அசோக் தின்டா கடந்த சில வருடங்களாக கடுமையாக இகழப்பட்டு வருகிறார். இந்திய அணிக்காக விளையாடியுள்ள அசோக் தின்டாவை இவ்வாறு இகழ்வது தவறாகும். உள்ளுர் கிரிக்கெட்டில் இவரது ஆட்டத்திறன் வருடத்திற்கு வருடம் சிறப்பாகி கொண்டே வருகிறது.
அசோக் தின்டா கொடுத்த இந்த பதிலடிக்கு பிறகாவது "அசோக் தின்டா அகாடமி" என்று இகழுபவர்கள் அமைதியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
