நடந்தது என்ன?
2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்படைத்துள்ளது. இந்தியா உடனான அரசியல் பிரச்சினை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடுநிலை மைதானமாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஆசிய கோப்பையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா...
2018 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கியிருந்தது. பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட தயங்கியதால் பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் 2018 ஆசிய கோப்பையை நடத்தியது.
பாகிஸ்தானிற்குள் மற்ற நாட்டு அணிகள் விளையாட தயங்குவதால் அந்த நாட்டின் சொந்த மண்ணாக ஐக்கிய அரபு ஆமிரத்தில் உள்ள மைதானம் தற்காலிகமாக திகழ்கிறது. இதற்கு காரணம் 2009ல் இலங்கை பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது இலங்கை அணி வீரர்களின் பேருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
கதைக்கரு
ஆசிய கோப்பை, 2020 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக செப்டம்பரில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானிலிருந்து வெளிவந்த செய்திகளின் படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சொந்த மண்ணிலேயே ஆசியக் கோப்பை தொடரை நடத்த விரும்பியது. இருப்பினும் இது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. மற்ற நிர்வாக குழுக்களிடம் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த ஆசிய கோப்பை பிரதிநிதிகள் கூட்டத்தில் ஆசிய கோப்பையை எங்கள் சொந்த மண்ணிலேயே நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தானில் அக்காலத்தில் நிலவிய பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு எந்த இடத்தில் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்துவது என மற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.
என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து செய்திகள் வெளியாகின என "இந்திய டுடே" செய்திகள் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாவது,
பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்பது பற்றி இந்திய அரசாங்கம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். இந்திய அரசு ஒப்புக் கொண்டால் இந்திய அணி மிக்க மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானிற்கு சென்று ஆசியக் கோப்பையில் விளையாடும்.
அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் சமநிலையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 2018 ஆசியக் கோப்பையை நடத்தியது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நடத்த வேண்டும் என குறிப்பிட்டு இந்தியா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"பிடிஐ" பத்திரிகையில் வெளியான செய்திகளின்படி,
"பாகிஸ்தானிற்கு சென்று இந்தியா விளையாடுவது குறித்து இந்திய அரசாங்கம் முடிவு செய்யும். அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதனை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பின்பற்றும். இந்திய அணி நிர்வாகம் 2018 ஆசிய கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது போல பாகிஸ்தான் அணி நிர்வாகமும் சமநிலை மைதானத்தில் ஆசியக் கோப்பையை நடத்தும் என நம்பப்படுகிறது.
அடுத்தது என்ன?
பாகிஸ்தான் அணி சமநிலை மைதானத்தில் ஆசியக் கோப்பையை நடத்த ஓப்புக்கொள்வதைக் காண மிக உற்சாகமாக இருக்கும். பாகிஸ்தான் சமநிலை மைதானத்தில் நடத்த ஒப்புக் கொள்ளவில்லை எனில் கண்டிப்பாக இந்தியா ஆசியக் கோப்பையில் பங்கேற்காது.