ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டி-20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் உலககோப்பை தொடர்க்கு முன்பாக நடைபெறும் தொடர் என்பதால் மிகவும் முக்கியமாக தொடராக கருதப்படுகிறது. இந்த தொடரில் இடம் பேரும் வீரர்கள் தான் உலககோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வெற்றி பெற்றது. இதை அடுத்து இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் அணியில் இடம் பெற்றிருந்தனர். இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர் ரவிந்திர ஐடேஜா ஒரு புதிய சாதனையை படைத்தார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் விளையாட ரோஹித் சர்மா முதல் ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஷிகார் தவான் சிறிது நேரம் நின்று 21 ரன்னில் மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ராய்டு 18 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து வந்த விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். விஜய் சங்கர் 46 ரன்னில் எதிர்பாராதவிதமாக அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து வந்த கேதார் ஜாதவ் 11 ரன்னில் ஜாம்பா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து தோனி டக் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ரவிந்திர ஜடேஜா பெறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவருடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் விளாசினார். இது அவரது ஒரு நாள் போட்டியில் 40வது சதம் ஆகும்.
அதை அடுத்து இந்த போட்டியில் ரவிந்திர ஜடேஜா ஒரு புதிய சாதனையை படைத்தார். ஆல்- ரவுண்டராக இந்திய அணியில் ஒரு நாள் போட்டியில் 2000 ரன்களை கடந்தார். 2000 ரன்கள் மற்றும் 150+ விக்கெட்களை வீழ்த்தியவர் பட்டியலில் இந்திய அணியின் மூன்றாவது வீரர் என்ற பெறுமையை அடைந்தார். இதற்கு முன்னர் இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் 3782 ரன்களும் 253 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். அதற்கு பின்னர் மற்றோரு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களும் 154 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். அதன் பின்னர் பல வீரர்கள் இந்திய அணியில் விளையாடி உள்ள நிலையில் இந்திய அணியின் மூன்றாவது வீரராக ரவிந்திர ஜடேஜா இந்த பெறுமையை அடைந்துள்ளார்.