ஆஸ்திரேலியா அணி யூஏஈ(UAE)-க்கு சுற்றுபயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி யூஏஈ-யில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் பக்கர் ஜமான், பாபர் ஆசாம், கேப்டன் ஷப்ராஸ் அகமது மற்றும் ஹாசன் அலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மாலீக் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு உலக கோப்பை தொடருக்கு முன்பு நடக்கும் கடைசி தொடர் என்பதால் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரை முக்கியமான தொடராக கருதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இமாம் -உல்-ஹாக் மற்றும் ஷான் மாஸூத் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் பொறுமையாக விளையாடினர். பின்னர் இமாம்-உல்-ஹாக் 17 ரன்னில் நாதன் லயன் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய ஹரிஸ் சொகைல் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் விளையாடிய ஷான் மாஸூத் 40 ரன்னில் நேதன் கூல்ட்டர்-நைல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய உமர் அக்மல் மற்றும் சொகைல் இருவரும் சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். நிலைத்து விளையாடி சொகைல் அரைசதம் அடிக்க, உமர் அக்மல் 48 ரன்னில் கூல்ட்டர்-நைல் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் மாலீக் 11 ரன்னில் மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பாஹிம் அஷ்ரப் 28 ரன்னில் ஜய் ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய இமாத் வாசிம் நிலைத்து விளையாட, மறுமுனையில் பொருமையான ஆட்டத்தை வெளிபடுத்திய சொகைல் சதம் வீளாசினார். இதை அடுத்து பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 280-5 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விக்கெட் விவரம்: கூல்ட்டர்-நைல் -2, மேக்ஸ்வெல்-1, ஜய் ரிச்சர்ட்சன் 1, நெதன் லயன்-1.

அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கவாஜா 24 ரன்னில் பாஹிம் அஷ்ரப் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய ஷான் மார்ஷ் பின்ச் உடன் இணைந்து பெரிய பாட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 172 ரன்களை குவித்தனர். ஆஸ்திரேலியா அணி கேப்டன் பின்ச் ஒரு நாள் போட்டியில் தனது 12வது சதத்தை அடித்தார். பின்ச் 116 ரன்னில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். ஆஸ்திரேலியா அணி 49வது ஓவரில் 281 ரன்களை அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஆரோன் பின்ச் பெற்றார். இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.