ஆஸ்திரேலியா அணி யுஏஈ-க்கு சுற்றுபயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பிரமாண்ட வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. இந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹாக் மற்றும் ஷான் மாஸூத் இருவரும் களம் இறங்கினர்.
தொடக்கத்திலேயே இமாம்-உல்-ஹாக் ஜய் ரிச்சர்ட்சன் பந்தில் டக்அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ஹரிஸ் சொகைல் நிலைத்து விளையாட ஷான் மாஸூத் 19 ரன்னில் ஜய் ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஹரிஸ் சொகைல் 34 ரன்கள் எடுத்து பின்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய உமர் அக்மல் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 16 ரன்னில் நெதன் லயன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை அடுத்து வந்த கேப்டன் ஷோயப் மாலீக் நிலைத்து விளையாடினார். சொகைல் மற்றும் மாலீக் இருவரும் பாட்னர்ஷிப் சேர்ந்து 127 ரன்கள் குவித்தனர். கேப்டன் ஷோயப் மாலீக் 60 ரன்னில் ஆடம் ஜாம்பா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பாஹிம் அஷ்ரப் நிலைத்து விளையாட, சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய முகமது ரிஸ்வான் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ரிஸ்வான் 115 ரன்னில் கூல்டர்-நைல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக பாஹிம் அஷ்ரப் 14 ரன்னில் கூல்டர்-நைல் பந்தில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 284 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் வீரர்களின் விக்கெட் விவரம்: ஜய் ரிச்சர்ட்சன் -2, கூல்டர்-நைல்-2, பின்ச்-1, நெதன் லயன்-1, ஆடம் ஜாம்பா -1.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக உஸ்மான் காவாஜா மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 209 ரன்களை குவித்தனர். ஆரோன் பின்ச் ஒரு நாள் போட்டியில் தனது 13வது சதத்தை பூர்த்தி செய்தார். இதை அடுத்து நிலைத்து விளையாடிய உஸ்மான் காவாஜா 88 ரன்னில் யாசீர் ஷா பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் 19 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஷான் மார்ஷ் நிலைத்து விளையாட ஆரோன் பின்ச் 150 ரன்களை குவித்தார். இதை அடுத்து ஆஸ்திரேலியா அணி 47.5 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.