ஆஸ்திரேலியா அணி யுஎஈ-க்கு சுற்றுபயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றிய நிலையில் நேற்று நான்காவது ஒரு நாள் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கட்டயம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மாலிக் பதில் இமாத் வாசிம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் காவாஜா இருவரும் களம் இறங்கினர். இருவரும் நிலைத்து விளையாடிய நிலையில் கேப்டன் பின்ச் 39 ரன்னில் முகம்மது ஹஸ்னைன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஷான் மார்ஷ் 5 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பீடர் ஹாண்ட்ஸ்கோம்ப் 7 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்னில் யாசிர் ஷா பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய மேக்ஸ்வெல் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய உஸ்மான் காவாஜா 62 ரன்னில் யாசிர் ஷா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய அலேக்ஸ் கேரி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மேக்ஸ்வெல் 2 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பினை பறிகொடுத்தார். 98 ரன்னில் மேக்ஸ்வெல் ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் அலேக்ஸ் கேரி அரைசதம் விளாச ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 277-7 ரன்களை எடுத்தது.
அதன் பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஷான் மாஸூத் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய மற்றோரு தொடக்க வீரர் அபித் அலி சதம் வீளாசினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அபித் அலி 112 ரன்னில் ஆடம் ஜாம்பா ஓவரில் அவுட் ஆகினார். இதை அடுத்து ஹரிஸ் சொகைல் 25 ரன்னில் லயன் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தனர்.
உமர் அக்மல் 7 ரன்னிலும், சாத் அலி 7 ரன்னிலும் அவுட் ஆக நிலைத்து விளையாடிய ரிஸ்வான் இரண்டாவது சதத்தை வீளாசினார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழக்க பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி தடுமாறியது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைபட்ட நிலையில் 11 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான். ஆஸ்திரேலியா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது.