ஆஸ்திரேலியா vs இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ரிப்போர்ட் 

Pravin
Labuschagne first test fifty
Labuschagne first test fifty

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் தொடங்கியது . நேற்று முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அணியில் எழு பேட்மென்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெடை இழந்து வெளியேறினர் . அணியில் அதிகபட்சமாக டிக்குவெல்லா 64 ரன்களை எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் கம்மிங் 4, ரிட்சட்சன் 3, ஸ்டார்க் 2, லயன் 1 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டகரார்களாக ஹரிஸ் 44 ரன்களிலும், ப்ர்ன்ஸ் 15 ரன்னிலும் , ஹாவாஜா 11 ரன்னிலும் விக்கெட் இழந்தனர்

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கதிலேயே லயனின் விக்கெடை இழந்தது. லயன் 1 ரன்னில் லக்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நான்கு விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி 82-4 என்ற நிலையில் இருந்தது. பின்னர் களம் இறங்கிய லபுட்சக்னெ மற்றும் ஹெட் ஆகியோர் நிதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை மீட்டேடுத்தனர். பின்னர் தனது முதல் அரைசதத்தை அடித்த லபுட்சக்னெ 81 ரன்னில் டி சில்வா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கூர்டிஸ் பேட்டர்சன் ஹெட் உடன் சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . நிலைத்து விளையாடிய ஹெட் 84 ரன்களில் லக்மல் பந்தில் தனது விக்கெடை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் வந்த வேகத்தில் லக்மலின் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கபட்ட பெயின் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் .

Head fifty
Head fifty

பின்னர் களம் இறங்கிய கம்மிங்ஸ் இந்திய அணியுடனான தொடரில் பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . எனவே இந்த போட்டியிலும் பேரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் . சமிரா வீசிய பந்தில் டிக்குவெல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். நிலைத்து நின்று விளையாடிய பேட்டர்சன் 30 ரன்களில் லக்மல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் . பின்னர் வந்த ஸ்டார்க் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . ரிட்சட்சன் அவருக்கு ஒத்துலைத்தார். ரிட்சட்சன் 1 ரன்னில் பெரேரா பந்தில் விக்கெடை இழந்தார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 323-10 எடுத்தது. இலங்கை அணியில் லக்மல் 5 விக்கெட்களையும் , பெரேரா 2 விக்கெட்களையும், டி சில்வா , குமாரா, சமிரா தலா ஒரு விக்கெடுகளை வீழ்த்தினர்.

Lakmal get 5 wickets
Lakmal get 5 wickets

இலங்கை அணி ஆஸ்திரேலியாவை விட 179 ரன்கள் பின்தங்கி இருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கருநாரத்னெ மற்றும் திரிமன்னே இருவரும் களம் இறங்கினர் . கர்நாரத்னெ 3 ரன்னில் கம்மிங் பந்தில் விக்கெட் இழந்தார் . இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 17-1 எடுத்தது. இலங்கை அணி 162 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now