இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

Pravin
Kurtis Pattersen
Kurtis Pattersen

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா அணி இந்த நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கன்பெர்ரா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியதது அதன் படி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் பர்ன்ஸ் மற்றும் ஹெட் இருவரின் நிலையான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலைக்கு முன்னேறியது. இருவரும் சதம் அடித்து அசத்தினர். இவர்களின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டத்தில் வலுவான நிலையில் இருந்தது. பர்ன்ஸ் 172 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் பட்டர்சனும் 25 ரன்களில் களத்தில் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி நிலையான ஆட்டத்தை தொடர்ந்தது. பர்ன்ஸ் 180 ரன்னில் ரஞ்சிதா பந்தில் அவுட் ஆகினார். இரட்டை சதத்தை அடையாமல் தனது விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடி பட்டர்சன் அரைசதத்தை விளாசினார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் டிம் பெயின் பட்டர்சன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய பட்டர்சன் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டிம் பெயின் 45 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணி 534-5 ரன்களை எடுத்து இருந்த போது ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. முதல் இன்னிங்ஸகலேயே பெரிய இலக்கை வைத்த ஆஸ்திரேலிய அணி. இலங்கையை அணியில் முதல் இன்னிங்ஸில் பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது தொடக்க வீரர்களாக இலங்கை அணியின் கருநரத்னே மற்றும் திரிமன்னே இருவரும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நிலையான ஆட்டத்தை வெளிபடுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்களை சேர்த்தனர். திரிமன்னே 41 ரன்னில் லயன் பந்தில் அவுட் ஆகினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கருநரத்னே 46 ரன்னில் கம்மின்ஸ் விசிய பந்தில் காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய அணி கேப்டன் சண்டிமல் 15 ரன்னில் ஸ்டார்க் ஓவரில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய குசல் மென்டிஸ் 6 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆகினார்.

Dimuth Karunaratne
Dimuth Karunaratne

இலங்கை அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 120-3 என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை அணி பின்னர் களம் இறங்கிய குசல் பெரேரா மற்றும் தனஜெயா டி சில்வா இருவரும் களம் இறங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 123-3 என்ற நிலையில் இருந்தது. இலங்கை அணி ஆஸ்திரேலியாவை விட 411 ரன்கள் பின்தங்கி உள்ளது

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now