ஸ்டார்கின் வேகத்தில் வீழ்ந்தது இலங்கை அணி

Pravin
Khawaja
Khawaja

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா அணி இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கன்பெர்ரா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிலையான ஆட்டத்தால் வலுவான நிலைக்கு சென்றது மூன்று வீரர்கள் சதம் வீளாச ஆஸ்திரேலிய அணி 534 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 123-3 என்ற நிலையில் இருந்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியில் குசல் பெரேரா மற்றும் தனஜெயா டி சில்வா களத்தில் இருந்தனர். இருவரும் சிறிது நேரம் தாக்குபிடிக்க 29 ரன்னில் குசல் பெரேரா காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் களத்தில் இருந்த தனஜெயா டி சில்வா 25 ரன்னில் ஸ்டார் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் காயத்தில் இருந்து மீண்ட கருநராத்னே களம் இறங்கி சிறது நேரம் தாக்கு பிடித்தார். அரை சதத்தை கடந்த நிலையில் 59 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய டிக்குவேல்லா 25 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய சமிகா கருநரத்னே டக் அவுட் ஆகினார். அவர் லயன் விசிய பந்தில் ஸ்டார்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த தில்ருவான் பெரேரா 10 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பெர்னாண்டோ டக் அவுட் ஆகினார். ஆஸ்திரேலிய நட்சத்திர பவுலர் ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி 215 ரன்னிற்கு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா விட 319 ரன்கள் பின்தங்கியது.

starc five wickets
starc five wickets

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் பரன்ஸ் மற்றும் ஹாரிஸ் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே தடுமாற ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. ஹாரிஸ் 14 ரன்னில் ராஜிதா ஒவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கவாஜா நிலைத்து விளையாட பரன்ஸ் 9 ரன்னில் பெர்னாண்டோ ஓவரில் அவுட் ஆகினார். 25-2 என்ற நிலைக்கு தள்ளபட்ட ஆஸ்திரேலிய அணியில் பின்னர் வந்த லபுஸ்சாக்னே 4 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். 37-3 என்ற நிலையில் கவாஜாவுடன் ஜோடி சேரந்த ஹெட் அதிரடி காட்டினர் இருவரும் ரன்களை வேகமாக உயர்த்தினர்.

Kawaja's  8th  hunderd
Kawaja's 8th hunderd

கவாஜா தனது 8 வது சதத்தை பூர்த்தி செய்ததார். ஹெட் அரை சதம் விளாச ஆஸ்திரேலிய அணி 196 -3 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இலங்கை அணிக்கு 516 ரன்களை இலக்காக நிர்ணயிதது. அதன் பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 17-0 ரன்களை எடுத்தது.