இலங்கை அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைபற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா இந்த போட்டியை விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இலங்கை அணியில் அறிமுக வீரராக சாமிகா கருநாரத்னே களம் இறங்குகிறார். கருன் ரஞ்சிதா மற்றும் பெர்னாண்டோ இந்த போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக ஹாரிஸ் மற்றும் பர்ன்ஸ் இருவரும் களம் இறங்கினர்.
முதல் நாள் ஆட்டம் தொடங்கிய 3 வது ஓவரிலேயே ஹாரிஸ் பெர்னாண்டோ பந்தில் 11 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய கவாஜா பெர்னாண்டோ ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மூன்று பந்துகளே பிடித்த நிலையில் மூன்றாவது பந்தில் குசல் மென்டிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். 15-2 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. இந்த நிலையில் களம் இறங்கிய லாபுஸ்ஷானே வந்த வேகத்தில் 6 ரன்னில் கருநாரத்னே பந்தில் டிக்குவேல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். ஆஸ்திரேலிய அணி 25 ரன்னில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதை அடுத்து களம் இறங்கிய ஹெட் மற்றும் பர்ன்ஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். பர்ன்ஸ் நிதாணமான ஆட்டத்தை விளையாடினார். ஹெட் அதிரடியில் கலக்கினார்.
இந்த இணையை பிரிக்க முடியாமல் இலங்கை அணி தவித்தது. அரைசதத்தை இருவரும் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பர்ன்ஸ் அதிரடியாக 4வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டி தனது முதல் சதத்தை அடித்து அசத்தினார். இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளை விளையாடி உள்ள ஹேட் இதுவே அவரது முதல் சதம் ஆகும். பர்ன்ஸ் அதிரடியை தொடர ஹேட் பவுண்டரிகளாக விளாசினார். இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை வலுவாக்கினர். ஹெட் 150 ரன்களை கடந்து அசத்தினார். 160 ரன்களை எடுத்த ஹெட் இலங்கை அணியின் பெர்னாண்டோ ஓவரில் அவுட் ஆகினார். இந்த ஜோடி 4 வது விக்கெட்டிற்கு 308 ரன்களை குவித்தது.
பின்னர் களம் இறங்கிய பேட்டர்சன் பர்ன்ஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 150 ரன்களை கடந்த பர்ன்ஸ் டெஸ்டில் தனது அதிக பட்ச ரன்னை அடைந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்களை இழந்து 384 ரன்களை குவித்தது. பர்ன்ஸ் 172 ரன்களுடனும், பேட்டர்சன் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணியில் பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய அணி 384 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.