ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி இந்தியா உடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இந்த தொடரை சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இலங்கை அணி டெஸட் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவாதல் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி: டிம் பெயின் (கேப்டன்), மார்கஸ் ஹரிஸ் , ஜோ ப்ர்னஸ் , ஹாவாஜா, மார்னஸ் லாபுசாக்னெ, கெட் ,பிட்டர்சன் , கம்மிங்ஸ், ஸ்டார்க், லயன், ரிட்ஜட்சன் .
இலங்கை அணி: கருநாரத்னே , திரிமன்னே, சென்டிமல் ( கேப்டன்), மென்டிஸ் ,ரொஷான் சில்வா , டி சில்வா, டிக்வெல்ல, பெரேரா , லக்மல், சமீரா, லகிரு குமாரா.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேடிட்ங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கி இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக கருநாரத்னே மற்றும் திரிமன்னே சரியான தொடக்கத்தை அமைக்காததால் திரிமன்னே 12 ரன்னிலும், பின்னர் களம் இறங்கிய கேப்டன் சன்டிமல் 5 ரன்னிலும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர் . அதன் பின்னர் வந்த மென்டிஸ் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார் . கருநாரத்னே 24 ரன்னில் லயன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து மென்டிஸ், ரிட்சட்சன் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரொஷன் சில்வா மற்றும் டி சில்வா இருவரும் வந்த வேகத்தில் பெவுலியன் திரும்பினர் . கம்மிங்ஸ் பந்தில் ரொஷன் சில்வா 9 ரன்னிலும் , ரிட்சட்சன் பந்தில் டி சில்வா 5 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர் . பின்னர் வந்த டிக்குவெல்லா மட்டும் நிலைத்து விளையாடினர் . மறுமுனையில் வந்தவர்கள் சரிந்தனர் . இருப்பினும் டிக்குவெல்லா நிலைத்து ஆடினார். லக்மல் 7 ரன்னிலும், பெரேரா 1 ரன்னிலும் ஸ்டார்கின் வேகத்தில் வீழ்ந்தனர் . டிக்குவெல்லா அதிகபட்சமாக 64 ரன்னில் அவுட் ஆகினார் . சமிரா டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 144-10 ரன்னில் என முதல் இன்னிங்ஸை முடித்தது. ஆஸ்திரேலியா அணியில் கம்மிங்ஸ் 4 விக்கெட்களையும் , ரிட்சட்சன் -3 விக்கெட்களையும் , ஸ்டார்க் -2 விக்கெட்டும் , லயன் -1 விக்கெட்டையும் வீழ்த்தினர் . இந்த போட்டியில் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தியதன் முலம் டெஸ்டில் 200 விக்கெட்களை விழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார் ஆஸ்திரேலியா வீரர் ரிட்சட்சன் .
அதன் பின்னர் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஹரிஸ் மற்றும் ஜோ பர்னஸ் இருவரும் களம் இறங்கினர் சிறிது நேரம் தாக்குபிடித்த இந்த ஜோடி லக்மல் பந்தில் 15 ரன்னில் பர்னஸ் விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய கவாஜா வந்த வேகத்தில் 11 ரன்னில் பெரேரா பந்தில் அவுட் ஆனார் . நிலைத்து விளையாடிய ஹரிஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி 72-2 என்ற ஸ்கோரை சேர்த்தது.