Create
Notifications

உலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறும் அதிர்ஷ்டத்தை இழந்த ஆறு வீரர்கள்

Enபீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்,ஜோஸ் ஹாசில்வுட் டி'ஆர்சி ஷார்ட்
Muthu Mohamed
visit

அடுத்த மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலி அணி இன்று அறிவித்துள்ளது. அதில், பீட்டர் ஹான்ட்ஸ்கோம் மற்றும் ஜோஷ் ஹேஸல்வுட் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தனர். அது பற்றிய ஒரு தொகுப்பை காணலாம்.

பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்,ஜோஸ் ஹாசில்வுட் டி'ஆர்சி ஷார்ட்

#1.பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்

பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ஜனவரி மாதம் முதல் நல்ல ஃபார்மில் உள்ளார், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் வரவால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டில் 13 ஒருநாள் போட்டிகளில் 43 ரன்கள் விகிதம் சராசரியாக ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டடிகளிலும் தனது பேட்டிங்கின் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.அனைத்து பத்திரிகை மற்றும் முன்னாள் வீரர்களின் உத்தேச பட்டடியலில் இருந்த இவர் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் வருகையால் வாய்ப்பை இழந்தார்.

#2.ஜோஸ் ஹாசில்வுட்

ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியில் ஜோஸ் ஹாசில்வுட் வெளியேற்றம் கவனிக்கப்பட வேண்டியது. ஆறு மாதங்களுக்கு முன்பு இதை யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம், ஆனால் தேர்வாளர்கள் காயம் காரணமாக அவரை தேர்ந்தெடுக்கவில்லை என கூறுகிறார்கள், ஆகஸ்டில் நடை பெறும் ஆஷஸில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் சிறந்த சர்வதேச ஒருநாள் போட்டியின் பந்துவீச்சாளர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட் கம்மின்ஸ் மற்றும் ஜெ ரிச்சர்ட்ஸன் எழுச்சியாலும் கடினமான முடிவை தேர்வாளர்கள் எடுத்துள்ளனர்.

#3.ஆஷ்டன் டர்னர்

ஆஷ்டன் டர்னர் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அறிமுகமான வீரர் ஒரு போட்டியில் 84 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆஸ்திரேலிய அணி எப்போதும் ஒரு எதிர்பாராத வீரர் உலக கோப்பைக்கு தேர்வு செய்வது வழக்கம் அது இவராக இருக்கலாம் என தெரிந்தது அதை தேர்வுக்குழு மறுத்துள்ளது.

#4.கேன் ரிச்சர்ட்சன்

ஹாசில்வுட் போன்றே, ரிச்சர்ட்சனும் சமீபத்திய ஃபார்மின் சறுக்களால் ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 18 மாதங்களில் அவரின் பங்களிப்பு சிறப்பானதாக இல்லை. டேத் ஓவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து நேதன் கோல்டர்-நைல் மற்றும் ஜேசன் பெஹாரன்ஆஃப் ஆகியோரை தேர்வு செய்தனர்.

#5.மேத்யு வேட்

தேர்வுக்குழு மேத்யு வேடை விட அலெக்ஸ் கேரி மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. உலக கோப்பையை வென்றெடுக்க கீப்பர் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அலெக்ஸ் கேரியை தேர்வு செய்துள்ளது. வேட் 7 ஆம் நிலை வீரர் என்பதால் அவரை தேர்வு செய்யவில்லை, கேரி அணிக்கு தேவை பட்டால் டாப் ஆர்டரிலும் இறங்குவார் என்பது அணிக்கு பலம்.

#6.டி'ஆர்சி ஷார்ட்

பிக் பாஷ் தொடரின் தொடர் நாயகன் மற்றும் உள்ளூர் போட்டடிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்த டி'ஆர்சி ஷார்டிற்கு தேர்வர்கள் கூரிய பதில் இது அணியில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போதுமானதாக இல்லை என்கின்றனர். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் வாய்ப்பை சரியாக பயன் படுத்தவில்லை, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சுழற்சியில் எளிதில் விக்கெட்டை பாறிகொடுத்து விடுகிறார் போன்ற காரணங்களால் கனவு கலைந்தது. ஒரு வேலை வார்னர் அணியில் இடம் பெறாமல் இருந்திருந்தால் இவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.


Edited by Fambeat Tamil
Article image

Go to article

Quick Links:

More from Sportskeeda
Fetching more content...
App download animated image Get the free App now