டிம் பெய்னி ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக உள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் கிறிஸ் டிரிமெய்ன் ஆகிய புதிய இரண்டு வீரர்கள் 14 பேர் கொண்ட, இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்து உள்ளனர். இந்தியாவிற்கு எதிரான ஆஸ்த்ரேலிய டெஸ்ட் அணியில் நாதன் லயன் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர் ஆவார் .
மார்கஸ் ஹாரிஸ் தேர்வு கூறித்து குறித்து ஆஸ்திரேலியா அணி தேர்வு குழு தலைவர் டிரிவோர் ஹொன்ஸ் கூறியதாவது : ஸிபில்டு ஸில்டு தொடரில் விக்டோரியா அணியில் மார்கஸ் ஹாரிஸின் அற்புதமான ஆட்டத்தால் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார் . இவர் தற்போது நடந்த ஸிபில்டு ஸில்டு இறுதிப்போட்டியில் பரபரப்பு மிகுந்த நெருக்கடியான போட்டியை சிறப்பாக அணுகி தன்னை நிறுபித்துள்ளார். இவர் அதிக ரன்களை விளாசுவதற்கு மட்டும் அணியில் எடுக்கவில்லை , போட்டியில் இவருடைய மனநிலை மற்றும் சரியான எடுக்கும் முடிவுகள் திறன் போன்றவற்றிற்கே தற்போது ஆஸ்திரேலிய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கமின்ஸ் , ஜோஸ் ஹிசில் வுட், மிட்செல் ஸ்டார்க் உடன் அனுபவ வீரர் பீட்டர் சிடில் மற்றும் புதுமுகவீரர் கிறிஸ் டிரிமெய்ன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
கிறிஸ் டிரிமெய்ன் தொடர்ந்து சீராக விக்டோரியா அணியில் பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். இவருடைய அற்புதமான ஆட்டத்தால் ஸிபில்டு ஸில்டு தொடரின் இந்த வருட சீசனில் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த இரு சீசனாக தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்துவதிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே இவர் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற முழு தகுதியானவர் ஆவார்.
உஸ்மான் கவாஜா பாகிஸ்தான் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப் பட்டு வந்தார். இருந்த போதிலும் இந்திய தொடர் வருவதற்குள் அவர் நல்ல உடற் தகுதியினை அடைந்துவிட்டார். கவாஜா பாகிஸ்தானிற்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 85 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்களும் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது .
பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் ஸான் மார்ஸ் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் மீண்டும் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கபட்டுள்ளது. பீட்டர் ஹான்ட்ஸ் கோம் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆரோன் ஃபின்ச் யுஏயி ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் ஆரோன் ஃபின்ச். மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி :
டிம் பெய்னி ( கேப்டன்), மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் ஃபின்ச் , உஸ்மான் கவாஜா , ஸான் மார்ஷ் , மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் , பீட்டர் ஹான்ட்ஸ் கோம் , மிட்செல் ஸ்டார்க் , பேட் கமின்ஸ் , ஜோஸ் ஹசில் வுட் , நாதன் லயன், பீட்டர் பிடில் , கிறிஸ் டிரிமெய்ன்.