ஆஸ்திரேலியா அணிக்கு முற்றிலும் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலககோப்பையை வெல்லும் திறன் உள்ளது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய துணை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் தங்கள் அணியில் இடம்பெற தயாராகி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் பாண்டிங்.
உலகக்கோப்பை போட்டிகள் மே மாதம் துவங்கவிருக்கும் நிலையில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் வருகின்ற மார்ச் மாதத்தோடு நிபந்தனை காலம் முடிந்து அணியில் திரும்பவிருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் போது பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வருகின்ற ஜூன் 1ஆம் தேதி எதிர்கொள்ளவிருக்கிறது. அதற்கு பின்பு மேற்குஇந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் முறையே மோதவுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் வீரராகவும் மற்றும் கேப்டனாகவும் மூன்று முறை உலகக்கோப்பையை கைப்பற்றி இருக்கிறார் பாண்டிங். இவரின் அனுபவத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பினாள் தங்களது அணி நிச்சயமாக உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார் பாண்டிங்.
இவரிடம் நிருபர்கள் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வெல்லுமா ? என கேள்வி எழுப்பியபோது “நிச்சயமாக வெல்லும்” என பதிலளித்தார்.
மேலும் தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கே உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் மற்றும் ஸ்மித், வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பினால் நிச்சயம் ஆஸ்திரேலியா ஓர் சிறந்த அணியாக மீண்டும் உறுவெடுக்கும் என கூறியிருக்கிறார். மேலும் நான் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் என்பதால் இவ்வாறு கூறவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இங்கிலாதின் ஆடுகள தன்மைகள் எங்களது ஆட்டத்திற்கு ஏற்றவாறே இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணி நிச்சயமாக எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்றார்.
இவர் மேலும் கூறியதாவது: இப்பொது இருக்கும் எங்களது அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஸ்பின் பௌலிங்கை எதிர்நோக்கி விளையாட கூடியவர்கள். கடந்த வருடம் இவ்வாறு இல்லை எனவும் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் ஆட்ட தன்மையை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஸ்பின் பௌலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்து உள்ளார்.
மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் சிறந்த வீரர்கள் மேலும் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுமான ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இணைந்துவிட்டால் ஆஸ்திரேலியா மீண்டும் மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் உறுவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்டத்தின் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும் வீரர்கள் அணியில் இருக்கின்றனர். அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் திரும்பவிருக்கும் நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் காயம் காரணமாக ஓய்வில் இருப்பது வருத்தமளிக்கிறது.
நாங்கள் முன்னதாக உலக கோப்பை போட்டிகளில் மைக்கேல் பேவன் காயம் காரணத்தால் இல்லாத போதும், டேரன் லெமன் சஸ்பெண்ட் ஆன போதும் மற்றும் ஷேன் வார்னே , கில்லெஸ்பி ஆகியோர் வீடு திரும்பிய போதும் விளையாடி உள்ளோம் என முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய துணை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பையை பொறுத்தவரை முன்னதாக திட்டமிடுவது ஒருபுறம் இருந்தாலும் போட்டியின் போது சிறப்பாக செயல்பட்டாலே அது நமக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என நிறைவு செய்தார்.
எழுத்து: ஆம்னி ஸ்போர்ட்
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்