சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடரில், அதிக முறை கோப்பையை வென்ற ஒரே அணி, என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலிய அணி கடந்து வந்த வெற்றி பாதையைப் பற்றி இங்கு காண்போம்.
#1) இலங்கை அணிக்கு எதிராக ( 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பினிச் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறிது நேரம் நிதானமாக விளையாடிய ஆரோன் பினிச், 24 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித், 78 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் மைக்கேல் கிளார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலிய அணியின் ரன்களை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல், 53 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய மைக்கேல் கிளார்க், 68 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் வந்து வெளுத்து வாங்கிய ஷேன் வாட்சன், 67 ரன்கள் விளாசினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் குவித்தது.
377 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தில்ஷன் மற்றும் திரிமன்னே ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தில்ஷன் 62 ரன்கள் அடித்து, இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய குமார் சங்ககாரா, 104 ரன்கள் விளாசினார்.
அதன் பின்பு மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய சண்டிமால், 24 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இறுதிவரை போராடிய இலங்கை அணி, கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் இல்லாமல் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ஸ்காட்லாண்ட் அணிக்கு எதிராக ( 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், ஆஸ்திரேலிய அணியும், ஸ்காட்லாண்ட் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஸ்காட்லாண்ட் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோட்சர், டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய மேட் மசான், 40 ரன்கள் விளாசினார். இவரைத் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். எனவே ஸ்காட்லாண்ட் அணி 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. மைக்கேல் கிளார்க் மற்றும் ஆரோன் பினிச் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த மைக்கேல் கிளார்க், 47 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த ஷேன் வாட்சன், 24 ரன்கள் அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.