ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியின் நம்பர் 1 டெஸ்ட் இடத்தை தீர்மானிக்கும் தொடராக உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது நம்பர் 1 டெஸ்ட் இடத்தை தக்கவைக்க குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது
ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தரவரிசையில் தற்போது 5 வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கெதிரான தொடரில் 4-0 என தொடரை கைப்பற்றினால் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும். இந்திய அணி தனது நம்பர் 1 இடத்தை தக்கவைக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப் 20 யில் எந்த மாற்றமும் இல்லை . விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடைசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் " ஸ்டிவ் ஸ்மித்" 2வது இடத்திலும் , நியூசிலாந்து அணியின் கேப்டன் "கேன் வில்லியம்சன்" டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணி சார்பில் ஐந்தாவது இடத்தில் " ரவீந்திர ஜடேஜா " -வும், ஏழாவது இடத்தில் " ரவிச்சந்திரன் அஸ்வின் "-னும் உள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் வியாழன் அன்று இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. தற்பொழுது சர்வதேச டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடனும் , ஆஸ்திரேலிய அணி 102 புள்ளிகளுடனும் இருக்கின்றன.
14 புள்ளிகள் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை கைபற்றினால் இந்திய அணிக்கு டெஸ்ட் தரவரிசையில் எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் தோல்வி அடைந்தால் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் தனது புள்ளிகளை இழக்க நேரிடும்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 4-0 என கைப்பற்றினால் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 120 புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலிய அணி 97 புள்ளிகளை பெற்று 5வது இடத்திலேயே நீடிக்கும்.
ஆனால் இதற்கு எதிர்மாறாக நடந்தால் ஆஸ்திரேலிய அணி 110 புள்ளிகளை பெற்று டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறும். இந்திய அணி 108 புள்ளிகளை பெறும்.( 0.0065 புள்ளிகள் இங்கிலாந்தை விட பின்தங்கியிருக்கும் )
இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை நீடிக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.
3-0 என ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைபற்றினால் இந்திய அணி 109 புள்ளிகளும் , ஆஸ்திரேலிய அணி 108 புள்ளிகளையும் பெறும்.
மாறக 3-1 என ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைபற்றினால் இந்திய அணி 111 புள்ளிகளையும் , ஆஸ்திரேலிய அணி 107 புள்ளிகளையும் பெறும்.
எழுத்து : பீடிஐ
மொழியாக்கம் : சதீஸ்குமார்