இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று உலகச்சாதனையை படைத்தது . 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று( ஜனவரி 12) சிட்னியில் இந்திய நேரப்படி 7:50 ற்கு தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய XI : ரோகித் சர்மா( துணை கேப்டன்), ஷிகார் தவான் , விராட் கோலி ( கேப்டன் ), ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்) , ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது.
ஆஸ்திரேலிய XI: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி ( விக்கெட் கீப்பர்), கவாஜா, ஹான்ட்ஸ் கோம், ஷான் மார்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ் வெல், நாதன் லயான், சிடில், ரிச்சர்ட்சன், ஜேஸன் பெஹான்ட்ஆப்.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் : ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் அலெக்ஸ் கேரி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். 3வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய இரண்டாவது பந்தில் ஆரோன் ஃபின்ச் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 11 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களை அடித்தார். இந்த விக்கெட்டின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 100 வது விக்கெட்டினை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். பின்னர் சற்று அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த அலெக்ஸ் கேரி-யும் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்தார்.
முதல் பவர்பிளே-வில் ( 1-10 ஓவர்) ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஸ் கவாஜா-வுடன் சேர்ந்து பொறுப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20வது ஓவரில் இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது. இன்றைய போட்டியில் கேதார் ஜாதவ் இடம் பெறாததால் ராயுடு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டார்.
நிதானமாக விளையாடி வந்த கவாஜா 26வது ஓவரில் தனது 5வது சர்வதேச ஓடிஐ அரைசதத்தை விளாசினார். 28வது ஓவரில் ஜடேஜாவின் சுழலில் கவாஜா எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 81 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களை அடித்தார். 36வது ஓவரில் ஷான் மார்ஸ் தனது 13வது ஓடிஐ அரை சதத்தை அடித்தார். 38வது ஓவரில் குல்தீப் சுழலில் ஷான் மார்ஸ் , முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 70 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களை அடித்தார்.
பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் , ஹான்ட்ஸ் கோம்-வுடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். அதிரடியாக விளையாடிய ஹான்ட்ஸ் கோம் 44வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சரை விளாசி தனது 4வது சர்வதேச அரைசதத்தை விளாசினார். அத்துடன் ஹான்ட்ஸ் கோம் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ்-இன் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் ஆஸ்திரேலியா அணிக்கு வந்தது.
47வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய வேகத்தில் ஹான்ட்ஸ் கோம் , தவான்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக ஹான்ட்ஸ் கோம் 61 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 73 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ் வெல் , ஸ்டாய்னிஸ்-வுடன் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை அடித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 90 ரன்களை குவித்தது. ஸ்டாயனிஸ் 47 ரன்களுடனும் , மேக்ஸ் வெல் 11 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் , குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் , ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய இன்னிங்ஸ் : 290 என்ற இலக்குடன் இந்திய தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை பெஹன்டாப் வீசினார். முதல் ஓவரின் இறுதி பந்தில் தவான் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி-யும் 3வது ஓவரில் ரிச்சர்ட்சன் வீசிய வேகத்தில் ஸ்டாய்னிஸ்-டம் 3 ரன்களில் கேட்ச் ஆகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பின் களமிறங்கிய ராயுடுவும் நிலைக்காமல் அதே மூன்றாவது ஓவரின் 5வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபுள்யு ஆனார். ஓடிஐ கிரிக்கெட்-டில் மிகவும் குறைந்த ரன்களில் 3 விக்கெட்டுகளை இழப்பது இந்திய அணிக்கு இது மூன்றாவது முறையாகும்.
பின்னர் களமிறங்கிய தோனி ரோகித் சர்மா-வுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தோனி இந்த போட்டியில் 1 ரன்களை அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 10000 ரன்களை கடந்தார். 24வது ஓவரில் ரோகித் சர்மா தனது அரைசதத்தினை அடித்தார். அத்துடன் 26 வது ஓவரில் தோனி மற்றும் ரோகித் பார்ட்னர் ஷிப்பில் 100 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது. 32 வது ஓவரில் தோனி தனது 68வது சர்வதேச அரை சதத்தை அடித்தார்.
33வது ஓவரில் பெஹான்ட்ஆப் வீசிய பந்தில் தோனி எல்.பி. ஆனார். இவர் மொத்தமாக 95 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 52 ரன்களை அடித்தார். 40வது ஓவரில் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் போல்ட் ஆனார்.
நிலைத்து விளையாடிய ரோகித் சர்மா40வது ஓவரின் 5 பந்தில் இரண்டு ரன்களை அடித்து தனது 22வது சர்வதேச சதத்தினை விளாசினார். இதுவரை இந்திய- ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் ரோகித் சர்மா 7 சதங்களை விளாசி உள்ளார். இரண்டாவது பவர்பிளே(10- 40 ஓவர்கள்) முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற 107 ரன்கள் தேவைப்பட்டது. ரிச்சர்ட்சன் வீசிய 44 வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஷான் மார்ஸ்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 13 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களை அடித்தார்.
பின்னர் அடுத்த ஓவரிலேயே ஸ்டாயனிஸ் வீசிய பந்தில் ரோகித் சர்மா மேக்ஸ் வெல்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 129 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 133 ரன்களை விளாசித் தள்ளினார். 49வது ஓவரில் சிடில் வீசிய கடைசி பந்தில் குல்தீப் யாதவ் 3 ரன்களில் கவாஜா-விடம் கேட்ச் ஆனார். பின்னர் வந்த முகமது ஷமியும் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஸ்டாய்னிஸ் வேகத்தில் மேக்ஸ்வெல்-டம் 1 ரன்களில் கேட்ச் ஆனார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக வீரர் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டாயனிஸ் , பெஹான்ட்ஆப் தலா 2 விக்கெட்டுகளையும், சிடில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. 4 விக்கெட் வீழ்த்திய ரிச்சர்ட்சன் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 15ஆம் நாள் அடிலெய்டில் நடக்கிறது.