பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் , ஹான்ட்ஸ் கோம்-வுடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். அதிரடியாக விளையாடிய ஹான்ட்ஸ் கோம் 44வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சரை விளாசி தனது 4வது சர்வதேச அரைசதத்தை விளாசினார். அத்துடன் ஹான்ட்ஸ் கோம் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ்-இன் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் ஆஸ்திரேலியா அணிக்கு வந்தது.
47வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய வேகத்தில் ஹான்ட்ஸ் கோம் , தவான்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக ஹான்ட்ஸ் கோம் 61 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 73 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ் வெல் , ஸ்டாய்னிஸ்-வுடன் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை அடித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 90 ரன்களை குவித்தது. ஸ்டாயனிஸ் 47 ரன்களுடனும் , மேக்ஸ் வெல் 11 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் , குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் , ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய இன்னிங்ஸ் : 290 என்ற இலக்குடன் இந்திய தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை பெஹன்டாப் வீசினார். முதல் ஓவரின் இறுதி பந்தில் தவான் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி-யும் 3வது ஓவரில் ரிச்சர்ட்சன் வீசிய வேகத்தில் ஸ்டாய்னிஸ்-டம் 3 ரன்களில் கேட்ச் ஆகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பின் களமிறங்கிய ராயுடுவும் நிலைக்காமல் அதே மூன்றாவது ஓவரின் 5வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபுள்யு ஆனார். ஓடிஐ கிரிக்கெட்-டில் மிகவும் குறைந்த ரன்களில் 3 விக்கெட்டுகளை இழப்பது இந்திய அணிக்கு இது மூன்றாவது முறையாகும்.
பின்னர் களமிறங்கிய தோனி ரோகித் சர்மா-வுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தோனி இந்த போட்டியில் 1 ரன்களை அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 10000 ரன்களை கடந்தார். 24வது ஓவரில் ரோகித் சர்மா தனது அரைசதத்தினை அடித்தார். அத்துடன் 26 வது ஓவரில் தோனி மற்றும் ரோகித் பார்ட்னர் ஷிப்பில் 100 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது. 32 வது ஓவரில் தோனி தனது 68வது சர்வதேச அரை சதத்தை அடித்தார்.