33வது ஓவரில் பெஹான்ட்ஆப் வீசிய பந்தில் தோனி எல்.பி. ஆனார். இவர் மொத்தமாக 95 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 52 ரன்களை அடித்தார். 40வது ஓவரில் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் போல்ட் ஆனார்.
நிலைத்து விளையாடிய ரோகித் சர்மா40வது ஓவரின் 5 பந்தில் இரண்டு ரன்களை அடித்து தனது 22வது சர்வதேச சதத்தினை விளாசினார். இதுவரை இந்திய- ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் ரோகித் சர்மா 7 சதங்களை விளாசி உள்ளார். இரண்டாவது பவர்பிளே(10- 40 ஓவர்கள்) முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற 107 ரன்கள் தேவைப்பட்டது. ரிச்சர்ட்சன் வீசிய 44 வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஷான் மார்ஸ்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 13 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களை அடித்தார்.
பின்னர் அடுத்த ஓவரிலேயே ஸ்டாயனிஸ் வீசிய பந்தில் ரோகித் சர்மா மேக்ஸ் வெல்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 129 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 133 ரன்களை விளாசித் தள்ளினார். 49வது ஓவரில் சிடில் வீசிய கடைசி பந்தில் குல்தீப் யாதவ் 3 ரன்களில் கவாஜா-விடம் கேட்ச் ஆனார். பின்னர் வந்த முகமது ஷமியும் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஸ்டாய்னிஸ் வேகத்தில் மேக்ஸ்வெல்-டம் 1 ரன்களில் கேட்ச் ஆனார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக வீரர் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டாயனிஸ் , பெஹான்ட்ஆப் தலா 2 விக்கெட்டுகளையும், சிடில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. 4 விக்கெட் வீழ்த்திய ரிச்சர்ட்சன் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 15ஆம் நாள் அடிலெய்டில் நடக்கிறது.