பெர்த்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று 1-1 என 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. தற்போது மெல்போர்ன் ஆடுகளத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் முக்கியமான டெஸ்ட் போட்டியாக இரு அணிகளுக்குமே அமைந்துள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட்டில் இரு அணிகளுமே தொடரை கைப்பற்ற முழு ஆட்டத்திறனையும் கண்டிப்பாக வெளிப்படுத்தும்.
இதுவரை மெல்போர்ன் ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது இல்லை. இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் கண்டிப்பாக ஆட்டத்திறனை அதிகபடுத்த வேண்டும். மறுமுனையில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை தோற்கடித்து தனது சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் டெஸ்டில் சொதப்பினாலும் இரண்டாவது டெஸ்ட்டில் நன்றாக ஆட்டத்திறனை வெளிபடுத்தினர். மிடில் ஆர்டரிலும் இப்பிரச்சினை இருந்தது பின் 2வது டெஸ்டில் அதனை சரி செய்து கொண்டனர்.
இந்திய அணிக்கும் பேட்டிங்கில் பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் மெல்போர்ன் டெஸ்ட்டில் அதனை சரி செய்ய முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் இரு டெஸ்ட் போட்டிகளில கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கிய வீரர்களை பற்றி காண்போம்.
1.உஸ்மான் கவாஜா
32 வயதான சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் கவாஜா தற்பொழுது சிறிது சொதப்பி வந்தாலும் அவரது பேட்டிங் சராசரி 40ற்கும் அதிகமாகத்தான் உள்ளது. இவர் ரிக்கி பாண்டிங்கின் பேட்டிங் வரிசையான 3வது இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். ஆனால் இன்னும் அவரால் அந்த இலக்கை அடைய முடியவில்லை.
கவாஜா பெர்த் டெஸ்டின் இரண்டாது இன்னிங்ஸில் அடித்த 74 ரன்கள் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற மிகவும் உதவியாக இருந்தது.ஆஸ்திரேலிய அணியில் நல்ல பேட்டிங் திறன் கொண்டவராக கவாஜா உள்ளார். இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும்.
கவாஜா ஆட்டத்திற்கு ஏற்றவாறு பந்துவீச்சை சரியாக கணித்து விளையாடக்கூடியவர். பந்துவீச்சாளர்கள் இவரை கணிக்காத வகையில் நிதானமாக விளையாடக் கூடியவர் கவாஜா. இவர் அவுட்-சைட் ஆஃப்-ல் பந்து வீச்சை சரியாக எதிர்கொண்டு விளையாடக் கூடியவர். நிதானமாக நின்று பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை வாய்ந்தவர். அத்துடன் கவர் டிரைவ் மற்றும் கட் ஷாட் சிறப்பாக விளையாடக் கூடியவர்.
கவாஜா ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடினால் ஆஸ்திரேலிய அணியை கட்டுபடுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்.
2 . ஜாஸ்பிரிட் பூம்ரா
பூம்ரா ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருடைய வேகத்தில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் கூட அவுட் ஆகி விடுகின்றனர். இவரது முழு வேக பந்துவீச்சையும் இத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளார்.
இவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் நடுங்குகின்றனர். இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23.7 சராசரியுடன் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மெல்போர்ன் டெஸ்ட்டிலும் பந்துவீச்சை ஷார்ட்-பிட்சில் சீராக வீசினால் கண்டிப்பாக பல விக்கெட்டுகள் பூம்ரா-விற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இவர் விட்ட பவுண்சரில் மார்கஸ் ஹாரிஸின் தலைக்கவசம் மீது அடித்தது. அத்துடன் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்துவீசும் திறமை வாய்நதவராக பூம்ரா உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த அடிலெய்டு மற்றும் பெர்த் ஆடுகளத்தில் குறைந்த ரன்களை மட்டுமே கொடுத்து நன்றாக பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். மெல்போர்ன் டெஸ்ட்டில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய வீரராக பூம்ரா உள்ளார்.
3. பேட் கமின்ஸ்
25 வயதான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி போன்ற சில முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் சரியான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை பெற்றவராக விளங்குகிறார்.
இவர் முக்கியமாக எல்.பி.டபுள்யு(LBW) -ல் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தேர்ந்தவராக உள்ளார். இவர் டெஸ்ட் பந்துவீச்சில் 51 சராசரியை வைத்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட்டில் அணியின் வெற்றிக்காக இவர் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார்.
மெல்போர்ன் ஆடுகளம் சற்று சறுக்கலாக காணப்படும் என்பதால் பேட் கமின்ஸ்-ற்கு சிறப்பானதாக அமையும். 3வது டெஸ்ட்டில் இவரது கிராஸ் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சற்று கடினமானதாக அமையும்.
கமின்ஸிற்கு இந்தியாவிற்கு எதிரான இரு டெஸ்டிலும் போதுமான அளவிற்கு விக்கெட் கிடைக்காததால் இனிவரும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்-களை தனது வேகத்தில் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து : வரு
மொழியாக்கம் : சதீஸ்குமார்