வரலாற்று சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் ஆடுகளத்தில் டிசம்பர் 26 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் 3வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தொடரை கைப்பற்ற சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
உலகின் தலைசிறந்த நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விராட் கோலி மெல்போர்ன் டெஸ்ட்டில் சில முக்கிய மைல்கல்லை அடைய போகிறார் . எனவே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் , விராட் கோலியின் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய விருந்தாக அமையப் போகிறது. அதனை பற்றி நாம் இங்கு காண்போம்.
1. ஒரு வருடத்தில் மிக அதிக சர்வதேச ரன்கள்
விராட் கோலி 2018ல் இதுவரை விளையாடிய சர்வதேச போட்டிகளில் 2653 ரன்களை குவித்துள்ளார். ஒரு வருடத்தில் அதிக சர்வதேச ரன்களை விளாசிய குமார் சங்கக்காரா - வின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 216 ரன்கள் தேவை.
1. குமார் சங்கக்காரா 2014ஆம் ஆண்டில் 2868 ரன்களை அடித்துள்ளார்
2. விராட் கோலி 2018ஆம் ஆண்டில் 2653 ரன்களை அடித்துள்ளார்
2. ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அதிக டெஸ்ட் சதம்
விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு சதத்தினை விளாசினால் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் 6 டெஸ்ட் சதங்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்படும். அத்துடன் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அதிக டெஸ்ட் சதங்களை குவித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
3. ஒரு வருடத்தில் அதிக சர்வதேச சதங்கள்
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த வருடத்தில் மட்டும் 11 சதங்களை விளாசியுள்ளார். இவர் இன்னும் 1 சதத்தினை விளாசினால், ஒருவருடத்தில் அதிக (11 சதங்கள்) சதங்களை விளாசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பார்.
4. ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த 2வது இந்திய இந்திய பேட்ஸ்மேன்
ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட் - டின் சாதனையை வீழ்த்த விராட் கோலிக்கு இன்னும் 82 ரன்களே தேவை. சச்சின் டெண்டுல்கர் 2010 ஆம் ஆண்டு 1562 ரன்கள் குவித்து முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் 2002 ஆம் ஆண்டு 1137 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ராகுல் டிராவிட்டின் இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 82 ரன்களே தேவை.
ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்
1. சச்சின் டெண்டுல்கர் 2010ல் 1562 ரன்கள்
2. ராகுல் டிராவிட் 2002ல் 1137 ரன்கள்
3. விராட் கோலி 2018ல் 1053 ரன்கள்
எழுத்து : நிதிஷ்
மொழியாக்கம் : சதீஸ் குமார்